Monthly Horoscope: ஆவணி மாதம் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜ யோகம் தான்..!

ஆவணி மாதத்தில் சனி, குரு, புதன் கிரகங்கள் வக்ரமடைந்து பெயர்ச்சி ஆகும் இந்த மாதத்தில், எந்த ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறப்போகிறது,  அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என பார்க்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2022, 09:13 PM IST
  • நிதி நிலைமை மேம்படும். வருமானம், சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
  • குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.
  • தொழில் துறையில் உள்ளவர்களுக்கு இந்த மாதம் வெற்றிகளை அள்ளித் தரும் மாதமாக இருக்கும்.
Monthly Horoscope: ஆவணி மாதம் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜ யோகம் தான்..! title=

ஆவணி பிறந்தாலே பண்டிகைகளுக்கு விசேஷங்களுக்கும் பஞ்சலில்லை. கல்யாணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் அதிகம் நடைபெறும் மாதம். அற்புதமான மாதமான ஆவணியில் பல ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ராஜயோகம் காத்திருக்கிருக்கிறது.  ஆவணி மாதத்தில் மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து பெயர்ச்சி ஆகின்றன. சனி, குரு, புதன் கிரகங்கள் வக்ரமடைந்து பெயர்ச்சி ஆகும் இந்த மாதத்தில், எந்த ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறப்போகிறது,  அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என பார்க்கலாம். 

மிதுன ராசி: 

வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். லாபம், வருமானம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்  ராசி:

நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் நன்மை தரும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வேலையில் வெற்றி பெறவும் வாய்ப்புகள் உண்டு. வரும் 140 நாட்களும் இந்த ராசிக்காரர்களுக்கு குரு, செவ்வாய், புதன் மூலம் சிறப்பு அருள் பொழியும்.

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

விருச்சிக ராசி:

நிதி நிலைமை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எதிரபாராத வகையில் பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த மாதம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தொழில் வியாபாரத்திற்கு ஏற்ற காலம் அமையும்.

மீன  ராசி:

நிதி நிலைமை மேம்படும். வருமானம், சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு இந்த மாதம் ஒவெற்றிகளை அள்ளித் தரும் மாதமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்கள் வேலையை கவனித்து பாராட்டுவார்கள். இதனால் அலுவலத்தில் உங்களுக்கு கவுரவம் கிடைக்கும்.
வியாபாரத்திற்கு ஏற்ற காலம் அமையும். வருமானம் பெருகும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News