மாத ராசிபலன்: பிப்ரவரி 2023-ன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், செல்வமும், மகிழ்ச்சியும் பொங்கும்

February Monthly Horoscope: சில ராசிக்காரர்கள் இந்த மாதம் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2023, 06:58 PM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பணவரவு நன்றாக இருக்கும்.
  • பணத்தை மிச்சப்படுத்துவீர்கள்.
  • பிப்ரவரி 15க்கு பிறகு நல்ல லாபம் கிடைக்கும்.
மாத ராசிபலன்: பிப்ரவரி 2023-ன் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், செல்வமும், மகிழ்ச்சியும் பொங்கும் title=

பிப்ரவரி 2023 ராசிபலன்: பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பிப்ரவரி மாதம் தங்களுக்கு எப்படி அமையும் என்று தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த மாதம் தங்கள் கனவுகள் நிஜமாகுமா அல்லது கடினங்கள் தலைதூக்குமா என்று தெரிந்துகொள்ளும் பரபரப்பு அனைவருக்கும் உள்ளது. பிப்ரவரி மாதம் சில ராசிகளுக்கு மிக சுபமாகவும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். 

எனினும், சில ராசிக்காரர்கள் இந்த மாதம் அதிகப்படியான அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. பிப்ரவரி 2023 ராசிபலன்: மேஷம்

இந்த மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்களுக்கு பணம் சம்பாதிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். பிப்ரவரி மாதம் எதிர்பாராத இடங்களிலிருந்து திடீரென்று பண வரவுக்கான வாய்ப்புகள் உள்ளன. சூரியன், சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமான நிலையில் இருப்பதால் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். 

நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், பிப்ரவரி 15க்கு பிறகு தாராளமாக செய்யலாம். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அள்ளித் தரும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

2. பிப்ரவரி 2023 ராசிபலன்: மிதுனம் 

பிப்ரவரி மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக பிப்ரவரி 15க்குப் பிறகு, உங்கள் நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடந்த மாதத்தை விட இந்த மாதம் நல்ல பலன்களை காண்பீர்கள், நல்ல லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உருவாகும் திரிகிரஹி யோகம்! யாருக்கு பாதிப்பு? யாருக்கு சுபம் 

3. பிப்ரவரி 2023 ராசிபலன்: கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பணவரவு நன்றாக இருக்கும். பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். பிப்ரவரி 15க்கு பிறகு நல்ல லாபம் கிடைக்கும். இந்த மாதம் உங்கள் தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சொந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் அதிக லாபம் கிடைக்கும். 

குடும்பத்தில் அமைதியான, மகிழ்ச்சியான சூழல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். 

4. பிப்ரவரி 2023 ராசிபலன்: தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் செய்த முதலீட்டின் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற முடியும். இந்த மாதம் திடீரென்று நல்ல வருமானத்தைப் பெறலாம். 

சொத்துக்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தையும் பெறுவீர்கள். இந்த மாதம் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உங்களுக்கு உள்ளது. பிப்ரவரியில் சில வேலைகளில் பெரிய வெற்றி கிடைக்கும். இந்த மாதம் பல அனுகூலமான பலன்களை அள்ளிக்கொடுக்கும்.

மேலும் படிக்க | 23 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை: சுக்கிரன் மாற்றத்தால் பணம் கொட்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News