இன்று சுக்கிரன் பெயர்ச்சி, இந்த ராசிகளின் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும்

Venus Transit 2023: ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சியாகுவதால் சில ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகமாகும். இன்று சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக எந்த ராசிக்காரர்கள் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 22, 2023, 08:34 AM IST
  • சனி சுக்கிரன் சேர்க்கை.
  • இன்று கும்ப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.
  • எந்த ராசிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.
இன்று சுக்கிரன் பெயர்ச்சி, இந்த ராசிகளின் வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும் title=

சுக்கிரன் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, 2023 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் இடங்களிலிருந்து மாறி மற்ற ராசியில் பெயர்ச்சியாக உள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும். அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 22, 2023 ஞாயிற்றுக்கிழமை (இன்று), சுக்கிரன் கிரகம் சனியின் ராசியான கும்பத்தில் பெயர்ச்சியடையப் போகிறார். முன்னதாக திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 17, 2023 அன்று கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சியடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சியானது தற்போது சனி, சுக்கிரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. 

சனி, சுக்கிரன் சேர்க்கை
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மங்களகரமான பலனை தரும். இதேபோல், சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சியாகுவதால், 4 ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எனவே இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: குபேர லாபம் பெற போகும் 3 ராசிகள்!

கடக ராசி: ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் பெயர்ச்சியாகப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசி மக்களுக்கு சிறப்பு எச்சரிக்கை தேவை. இதன் போது கடக ராசிக்காரர்கள் பண நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

துலாம் ராசி: ஜோதிடத்தின் படி, இந்த ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன் ஆவார். இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சியாகப் போகிறார். சுக்கிரனின் பெயர்ச்சியால் மாணவர்களுக்கு கவனக்குறைவு ஏற்படலாம். அதே நேரத்தில், உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 

கன்னி ராசி: இந்த ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் ஏற்படும் அசுப விளைவுகளை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முதுகுவலி அல்லது கால் வலி பிரச்சனை வரலாம். அதே நேரத்தில், நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம்.

மீன ராசி: இந்த ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சியாகப் போகிறார். இதன் காரணமாக பொருளாதாரத் துறையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எதிரிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். சிறிய தவறு கூட பெரிய இழப்பை ஏற்படுத்தும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்ரன் பெயர்ச்சியும் மாளவ்ய ராஜயோகமும்! 25 நாட்களில் ‘3’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News