Maha Shivratri 2023: மகாசிவராத்திரி விரதத்தில் என்னென்ன சாப்பிடலாம்...!

Maha Shivratri 2023: மகாசிவராத்திரி அன்று விரதத்தின் போது, பழங்கள், பால் மற்றும் தானியம் அல்லாத பொருட்களை உட்கொண்டும் விரதத்தை கடைபிடிக்கலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 17, 2023, 12:13 PM IST
  • மகாசிவாரத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • மகாசிவாராத்திரி நாளை அனுசரிக்கப்படுகிறது.
  • இதில், குறிப்பாக பெண்கள் விரதம் இருப்பார்கள்
Maha Shivratri 2023: மகாசிவராத்திரி விரதத்தில் என்னென்ன சாப்பிடலாம்...! title=

நாடு முழுவதும் உள்ள பக்தர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று, மகா சிவராத்திரி. 'ஹர ஹர மகாதேவா' என கோஷங்கள் இந்தியாவெங்கும் ஒலிக்கும். இந்தாண்டு, மகா சிவராத்திரி, நாளை (பிப். 18) அனுசரிக்கப்படும். இது இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படும் சிவபெருமானின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 

இந்நாளில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து, விரதம் இருந்து, கங்கை நதியில் புனித நீராடி, சிவனை வழிபடுகின்றனர். மகா சிவராத்திரியில் விரதம் இருப்பதன் மூலம் கடவுளின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் மற்றும் ஆசைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. திருமணமான பெண்கள் தாம்பத்தியத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட விரதத்தை கடைபிடிப்பார்கள். அதே வேளையில், திருமணமாகாத பெண்கள் சிவபெருமானைப் போன்ற வாழ்க்கைத் துணை கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

விரதத்தின் போது நீங்கள் என்ன சாப்பிடலாம்?

மஹா சிவராத்திரியில், விரதத்தின்போது, பக்தர்கள் நாள் முழுவதும் தண்ணீர் அல்லது உணவை உட்கொள்ள மாட்டார்கள். இருப்பினும், இந்த வகை விரதத்தை பலரால் செய்ய முடியாது என்பதால், பெரும்பாலான மக்கள் பழங்கள், பால் மற்றும் தானியம் அல்லாத பொருட்களை சாப்பிடக்கூடிய விரதத்தை கடைபிடிக்கின்றனர். மகா சிவராத்திரியில் இந்த வகை விரதத்தை அனுசரிக்கும்போது நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளை இங்கே காண்போம்.   

1. ரோஸ் தந்தாய்: புத்துணர்ச்சியூட்டும் மற்றும் குடல்-குளிர்ச்சியூட்டும் குளிர்பானம், ரோஸ் தண்டாய். இது சிவராத்திரியின் சிறப்பு பானமாகும். இது ரோஜா சாரம் கொண்டு தயாரிக்கப்பட்டு புதிய ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்படுகிறது. ஒரு நல்ல சுவையை வழங்கக்கூடியது. இந்த பானம் உங்களை நிறைவாக வைத்திருக்கும். உங்கள் வயிற்றின் அமிலத்தன்மையை குளிர்விக்கிறது.

மேலும் படிக்க | Shani Uday: கும்பத்தில் அஸ்தமன சனியாக அமைதியான சனீஸ்வரர் ’கம்மிங் பேக்’! 4 ராசிகளுக்கு தன யோகம்

2. உருளைக்கிழங்கு: மஹா சிவராத்திரி பண்டிகையின் போது உண்ணப்படும் சிறந்த உணவுப் பொருட்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. அவர்கள் உங்களை நாள் முழுவதும் நிறைவாக வைத்திருக்க முடியும். உங்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு கிச்சடி மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு சாட் ஆகியவற்றில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்க்காமல் நீங்கள் உட்கொள்ளலாம்.

3. பால்: இந்த விசேஷ நாளில், பக்தர்கள் சிவலிங்கத்தை பாலில் கழுவுகிறார்கள், ஏனென்றால் சிவபெருமான் பாலை நேசிக்கிறார் என்று மத இந்து நூல்கள் கூறுகின்றன. எனவே, மகா சிவராத்திரி விரதத்தின் போது பால் பரவலாக உட்கொள்ளப்படுகிறது. பால் மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் பானங்கள் போன்றவற்றை நோன்பின் போது நீங்கள் சாப்பிடலாம்.

4. பழங்கள், உலர் பழங்கள்: ஒவ்வொரு பூஜை அல்லது விரதத்திலும் பழங்கள் உதவியாக இருக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. நீங்கள் பசி எடுத்தால், இந்த நாளில் நீங்கள் பழ சாலடுகள் மற்றும் பழ மில்க் ஷேக்குகள் கூட சாப்பிடலாம். பாதாம், பேரீச்சம்பழம், திராட்சைகள் மற்றும் உலர்ந்த பாதாமி பழங்கள் போன்ற பலவகையான உலர் பழங்களையும் நீங்கள் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | மஹாசிவராத்திரி 2023: சிவராத்திரி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல நேரம் ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News