மாத ராசிபலன்: கிரக மாற்றங்களால் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி பொங்கும், லாபம் பெருகும்

Monthly Horoscope-September:  செப்டம்பர் மாதம் சிலருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சில ராசிக்கார்ரகள் லட்சுமி தேவியின் அருளால் செப்டம்பரில் பணமும், புகழும் பதவி உயர்வும் பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2022, 12:18 PM IST
  • மிதுன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும்.
  • வலுவான லாப வாய்ப்புகள் உள்ளன.
மாத ராசிபலன்: கிரக மாற்றங்களால் இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி பொங்கும், லாபம் பெருகும் title=

செப்டம்பர் மாத ராசிபலன்: பல முக்கிய கிரகங்களின் ராசிகள் இந்த மாதத்தில் மாறப் போவதால், ஜோதிடப் பார்வையில் செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செப்டம்பர் மாத கிரக மாற்றங்களும் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளில் அதிகப்படியான அனுகூலமான சுப பலன்கள் காணப்படும். செப்டம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: 

செப்டம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமானதாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. அலுவலக வேலை மற்ற சொந்த தொழில் செய்பவர்களும் இந்த நேரத்தில் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும்.  

இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். முதலீடு செய்ய விரும்புவோருக்கு, இந்த நேரம் மிகவும் சாதகமானது. அவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாகவும் அமைதியாகவும் இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். சமய, ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.

மேலும் படிக்க | அடுத்த மாதம் மாறும் சனியின் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம், நினைத்தது நடக்கும்

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். வலுவான லாப வாய்ப்புகள் உள்ளன. பணவரவால் நிதி நிலை வலுப்பெறும். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். கணவன் / மனைவி, குழந்தையுடன் அன்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் பெரிய பலன்களை அளிக்கும்.  இவர்களின் செல்வாக்கினால் வியாபாரம் பெருகும். எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், பணியிடத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அவர்கள் செய்யும் பணி பாராட்டப்படும். வாழ்க்கைத் துணையுடன் நேரம் நன்றாகவும் இனிமையாகவும் கழியும். குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுடனும் நல்லிணக்கம் இருக்கும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை இருக்கும். ஆன்மீகப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் அமையும்.

மேலும் படிக்க | சனியின் அருளால் தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News