வக்ர சனியால் உருவாகும் ராஜயோகம்: 3 ராசிகளின் தலைவிதி மாறும்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Shani Vakri: சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் இந்த ஷஷ ராஜயோகத்தால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 3, 2023, 10:32 AM IST
  • ஷஷ ராஜயோகம் அமைவதால், பொருளாதாரத் துறை தொடர்பான வேலைகளில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும்.
  • இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும்.
வக்ர சனியால் உருவாகும் ராஜயோகம்: 3 ராசிகளின் தலைவிதி மாறும்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள் title=

சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ராசியையும் போக்கை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த மாற்றம்  அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளில் அசுப பலன்களும் ஏற்படுகின்றன. அனைத்து கிரக மாற்றங்களும் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகமாகவும் உள்ளார். ஜூன் 17-ம் தேதி இரவு 10.56 மணிக்கு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சியை மேற்கொள்வார். சனியின் வக்ர பெயர்ச்சியால் ஷஷ ராஜயோகம் உருவாகிறது. அதன் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் இந்த ஷஷ ராஜயோகத்தால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு இந்த காலத்தில் செல்வம் மற்றும் கௌரவம் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்கள் சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகத்தால் நன்மைகளைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில், பிரபலமான நபர்களுடனான உறவுகள் நன்றாக இருக்கும். உங்களது தலைமைத்துவ திறன் மேம்படும். இக்காலக்கட்டத்தில் தடைப்பட்ட வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும், கூட்டாண்மையுடன் செய்யப்படும் வியாபாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இந்த காலத்தில் உங்கள் ஆளுமையும் மேம்படும்.

வியாபாரத்தை முன்னேற்ற புதிய வழிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் உங்களுக்கு பல அனுகூலமான பலன்களை அள்ளித் தரும்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 4 ராசிகளுக்கு அதிஷ்டம் நிச்சயம்!

சிம்ம ராசி

கும்ப ராசியில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைவதன் பலன் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். இந்த காலத்தில் திடீர் பண ஆதாயத்திற்கான அறிகுறிகள் தென்படும். இத்துடன் வக்ர பெயர்ச்சி காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்து நல்லுறவு உருவாகும். திருமணத்திற்கு பொருத்தமான துணையை தேடுபவர்களும் இந்த காலகட்டத்தில் நன்மைகளைப் பெறலாம்.

உங்கள் செயல்திறன் இப்போது நன்றாக இருக்கும் என்பதால், இப்போது பதவி உயர்வுடன் சேர்த்து இன்க்ரிமென்ட், அதாவது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

விருச்சிக ராசி

ஷஷ ராஜயோகம் அமைவதால், பொருளாதாரத் துறை தொடர்பான வேலைகளில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த நேரத்தில், நிலம், வாகனம் அல்லது சனி பகவான் தொடர்பான பொருட்களை வாங்குவது சிறப்பான பலனைத் தரும். இப்போது விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். அதிக லாபம் காண்பதற்கான நேரமாக இது இருக்கும். 

குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். பயணங்கள் செல்வதால் அதிக செலவு ஏற்படும். மோசமான விளைவுகளைத் தவிர்க்க, சிவலிங்கத்துக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள். இந்தக் காலகட்டத்தில் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு ஜாக்பாட் காலம் என்றே சொல்லலாம். உங்களுக்கு அதிகமான பண வரவு இருக்கும். இது தவிர, நோய்களும் விலகி நிற்கும். வாயில்லா ஜீவன்களை பார்த்துக்கொள்வது அதிக நன்மை பயக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வார ராசிபலன் (ஜூன் 5-11): வரும் வாரம் இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News