ராகு பெயர்ச்சி: 153 நாட்கள் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... பணத்துக்கு பஞ்சம் இருக்காது!!

Rahu Peyarchi: அனைத்து ராசிகளிலும் ராகு பெயர்ச்சியின் தாக்கம் தெரியும். எனினும் ராகு மேஷ ராசியில் இருப்பதால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 2, 2023, 11:03 AM IST
  • கடக ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல நிதி பலன்கள் கிடைக்கும்.
  • இந்தக் காலகட்டத்தில் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு ஜாக்பாட் காலம் என்றே சொல்லலாம்.
  • உங்களுக்கு அதிகமான பண வரவு இருக்கும்.
ராகு பெயர்ச்சி: 153 நாட்கள் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... பணத்துக்கு பஞ்சம் இருக்காது!! title=

ராகு-கேது பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும்போது, அதன் தாக்கம், அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது மட்டுமின்றி, நாடு உலகம் என இவற்றின் செயல்பாடுகளிலும் தாக்கம் காணப்படும். 

சனி பகவானுக்கு பிறகு மிக மெதுவாக நகரும் கிரகம் ராகு. ராகு ஒரு ராசியில் ஒரு வருடம் தங்குகிறார். ஏப்ரல் 12, 2023 அன்று காலை 11.58 மணிக்கு ராகு மேஷ ராசியில் பிரவேசித்தார். இப்போது அக்டோபர் 30, 2.13 நிமிடங்கள் வரை, அவர் இந்த ராசியில் இருப்பார். இதற்குப் பிறகு அவர் குரு பகவான் அதிபதியாக உள்ள மீனத்திற்குச் செல்வார்.

ராகு ஒரு நிழல் கிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் நிலை மோசமாக இருந்தால் அந்த நபர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனினும், மேஷ ராசியில் ராகு இருப்பதால் பல ராசிக்காரர்கள் அதன் அனுகூலமான பலன்களை அனுபவிப்பார்கள். கிட்டத்தட்ட அனைத்து ராசிகளிலும் ராகு பெயர்ச்சியின் தாக்கம் தெரியும். எனினும் ராகு மேஷ ராசியில் இருப்பதால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்கள் மீது மகிழ்ச்சி மழை பொழியும். இவர்களது அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கும்ப ராசி

கும்ப ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் மூன்றாவது வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். எனவே, இவர்களின் நம்பிக்கை இந்த காலத்தில் மிக அதிகமாக இருக்கும். வியாபாரத்தை முன்னேற்ற புதிய வழிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் உங்களுக்கு பல அனுகூலமான பலன்களை அள்ளித் தரும்.

மேலும் படிக்க | பத்ர புருஷ் ராஜயோகம்: மிதுன ராசியில் புதன் சஞ்சரிப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை..!

விருச்சிக ராசி

ராகு சஞ்சரித்த பிறகு விருச்சிக ராசியின் ஆறாம் வீட்டில் வந்து குடியேறுகிறார். ஆகையால் இந்த காலத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல வேலைகளுக்கான வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் செயல்திறன் இப்போது நன்றாக இருக்கும் என்பதால், இப்போது பதவி உயர்வுடன் சேர்த்து இன்க்ரிமென்ட், அதாவது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு 10ம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். அதனால் உத்தியோகத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வொரு இலக்கையும் எளிதாக அடைவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். பயணங்கள் செல்வதால் அதிக செலவு ஏற்படும். மோசமான விளைவுகளைத் தவிர்க்க, சிவலிங்கத்துக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களின் கர்மபாவத்தின் 10ஆம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணத்தில் இருந்தால் அதிக பலன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு ஜாக்பாட் காலம் என்றே சொல்லலாம். உங்களுக்கு அதிகமான பண வரவு இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்கள் அதிக லாபம் ஈட்ட முடியும். இது தவிர, நோய்களும் விலகி நிற்கும். வாயில்லா ஜீவன்களை பார்த்துக்கொள்வது அதிக நன்மை பயக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குபேரருக்கு பிடித்தமான ராசிகள் இவைதான்: பண மழையில் நனைவார்கள்.. உங்க ராசி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News