இன்னும் 8 நாட்களில் 5 ராசிகளுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்..! கொட்டி கொடுக்கும் செவ்வாய் - சுக்கிரன்

செல்வம்-ஆடம்பரம், காதல் போன்றவற்றைக் கொடுப்பவரான சுக்கிரன் கடக ராசிக்குள் நுழையப் போகிறார். சுக்கிரனின் சஞ்சாரத்துடன் கடகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை ஏற்படுவதால் சிலருக்கு அணுகூலமான பலன்கள் கிடைக்கும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 22, 2023, 02:51 PM IST
  • இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி
  • 5 ராசிகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்
  • மே 30க்குப் பிறகு நல்ல காலம் பிறக்கிறது
இன்னும் 8 நாட்களில் 5 ராசிகளுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்..! கொட்டி கொடுக்கும் செவ்வாய் - சுக்கிரன் title=

மே 30 அன்று, சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. அன்று இரவு 7.39 மணிக்கு கடக ராசிக்குள் நுழையும் சுக்கிரனின் சஞ்சாரம் ஜூலை 7ஆம் தேதி வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாய் ஏற்கனவே கடகத்தில் இருப்பதால், கடகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை இருக்கும். செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நாடு, உலகம் மற்றும் மக்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் சஞ்சாரத்தால் உண்டான சுக்கிரன்-செவ்வாய் சேர்க்கை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரும் என்பதை அறிவோம்.

செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: 

சுக்கிரன் சஞ்சாரத்தால் உருவாகும் செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கை குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். உங்கள் குடும்பத்தின் வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மனைவிக்கும் வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.

மேலும் படிக்க | மகேஷ் நவமி பண்டிகை எப்போது? ​​ஏன் கொண்டாடப்படுகிறது?​

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கலாம். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். சொத்துக்களால் லாபம் உண்டாகும். சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.

கடகம்: 

சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கை கடக ராசிக்காரர்களின் ஆளுமையை மேம்படுத்தும். அவர்களின் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். பணியிடத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மரியாதை அதிகரிக்கும். வேலை சிறப்பாக இருக்கும்.

கன்னி: 

உங்களின் எந்த ஒரு பெரிய ஆசையும் நிறைவேறும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். தனியாக இருப்பவர்கள் துணையை பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மூத்த அதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். காதலில் காலம் கடந்து போகும்.

மகரம்: 

உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணை, காதல் துணையுடன் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் தொழில் வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் வேகமாக வளரும்.

மேலும் படிக்க | கடகத்தில் இணையும் சுக்கிரன் - செவ்வாய்! வெற்றிகளை குவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News