கடகத்தில் இணையும் சுக்கிரன் - செவ்வாய்! வெற்றிகளை குவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தெளிவாகத் தெரியும்.  கிரக நிலைகளின் விளைவு சுபமாகவோ அல்லது அசுபமாகவோ இருக்கலாம். இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 இரவு நடக்கப் போகும் நிலையில் அதனால் உண்டாகும் மாற்றங்கள், சில ராசிகளுக்கு எதிர்பாராத வெற்றிகளையும் பண வரவையும் கொண்டு சேர்க்கும்.

Shukran Mangal Yuti 2023: ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தெளிவாகத் தெரியும்.  கிரக நிலைகளின் விளைவு சுபமாகவோ அல்லது அசுபமாகவோ இருக்கலாம். இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 இரவு நடக்கப் போகும் நிலையில் அதனால் உண்டாகும் மாற்றங்கள், சில ராசிகளுக்கு எதிர்பாராத வெற்றிகளையும் பண வரவையும் கொண்டு சேர்க்கும்.

1 /6

ஜோதிட சாஸ்திரப்படி மே 30ம் தேதி கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் ஜூலை 7ம் தேதி வரை இந்த ராசியில் நீடிப்பார். பெயர்ச்சி காரணமாக செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் பல ராசிகளை சேர்ந்தவர்களுக்கு லாட்டர் அடித்துள்ளது எனலாம். இந்த காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வெற்றிகளையும் பண வரவையும் கொண்டு சேர்க்கும். என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /6

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை பம்பர் பலன்களைத் தரப்போகிறது. குடும்பத்தின் வசதிகள் கூடும். அதுமட்டுமின்றி ஆடம்பரமான பொருட்களையும் வாங்கலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரலாம். கைக்கு வராமல் இருந்த பணத்தை திரும்பப் பெறலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு எந்த வித மன அழுத்தமும் இருக்காது. நிதி ஆதாயத்திற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

3 /6

சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை இந்த காலகட்டத்தில் பலப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். மறுபுறம், நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தால், இந்த நேரத்தில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். வருமான அதிகரிப்பு வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.

4 /6

சுக்கிரனும் செவ்வாயும் இணைவது கடக ராசிக்காரர்களுக்கும் அனுகூலமான பலன்களைத் தரப்போகிறது. வாழ்க்கையில் பல சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதுமட்டுமின்றி காதல் வாழ்விலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். துணையுடன் நல்லுறவு உண்டாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் நபரின் உறவு வலுவாக இருக்கும். கடினை உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்காலத்தில் நபரின் நிதி நிலை மேம்படும்.  

5 /6

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை குறிப்பாக மங்களகரமாகவும், பலன் தருவதாகவும் இருக்கும். பொருளாதார ரீதியாக வளமானவராக இருப்பார்கள்.  பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு கல்யாண கனவுகள் நிறைவேறும். இதுமட்டுமின்றி சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.