சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு பண வரவு, வெற்றிகள் குவியும்..மொத்தத்தில் ராஜயோகம்!!

Sukran Peyarchi: சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பல பலன்களை அள்ளித்தரும். இந்த காலத்தில் எடுத்த பணிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 14, 2023, 12:44 PM IST
  • தனுசு ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.
  • அனைத்து பணிகளிலும் எளிதாக வெற்றி கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிவடையும்.
சுக்கிரன் அருளால் இந்த ராசிகளுக்கு பண வரவு, வெற்றிகள் குவியும்..மொத்தத்தில் ராஜயோகம்!! title=

சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் செல்வம், ஆடம்பரம், உலக இன்பம், அன்பு போன்றவற்றுக்கு காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் பொருள் ரீதியிலான உலக இன்பங்களுக்கு பஞ்சமிருக்காது. 

சுக்கிரன் பெயர்ச்சி

அக்டோபர் 2 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சியானார். நவம்பர் 3 ஆம் தேதி வரை அவர் இங்கேயே இருப்பார். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit) அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்கள் பண மழையில் நனைவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இவர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பல பலன்களை அள்ளித்தரும். இந்த காலத்தில் எடுத்த பணிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷப ராசி (Taurus)

அக்டோபரில் சுக்கிரன் சிம்மத்தில் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள காரியங்களிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசைகள் நிறைவேறும், நிதி நிலை மேம்படும்.

மேலும் படிக்க | அடுத்த 15 நாட்கள் சனி உச்ச ஆட்டம்.. கஷ்டங்ககளுடன் சிதைய போகும் ராசிகள்

கடக ராசி 

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் அதிக முன்னேற்றத்தை அடைவார்கள். இந்த நேரம் இவர்களுக்கு குறிப்பாக நிதி ஆதாயங்களைக் கொண்டுவரும். பல வழிகளில் பணம் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். சில முக்கிய பொருட்கள் மீது நீங்கள் கொண்டிருந்த ஆசை இப்போது நிறைவேறும். பண வரவுக்கான புதிய வழிகள் திறக்கப்படும். சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும். 

துலா ராசி 

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். அக்டோபரில் நடைபெற்ற சுக்கிரனின் பெயர்ச்சி இவர்களுக்கு பதவி, பணம், கௌரவம் உள்ளிட்ட அனைத்தையும் தரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அடியிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் கார் அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். 

விருச்சிக ராசி 

சுக்கிரனின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் பலன்களைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வணிக வகுப்பினருக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். ஒரு புதிய பரிமாணத்தைத் தொடுவார்கள். இதுவரை நடக்காமல் இருந்த அனைத்து காரியங்களும் நடந்து முடியும். நீண்ட நாட்களாக சிக்கிக்கொண்டு இருந்த பணம் கிடைத்து நிம்மதி கிடைக்கும். 

தனுசு ராசி 

தனுசு ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். அனைத்து பணிகளிலும் எளிதாக வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிவடையும். திடீரென்று பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் இன்று அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News