சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: இன்னும் சில நாட்களில் நீதியின் கடவுளான சனி பகவானின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வு நடக்கவுள்ளது. தற்போது சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதி சனி பகவான் தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். இது முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி வக்ர நிவர்த்தி
சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாகவும் மிக மெதுவாக நகரும் கிரகமாகவும் இருக்கிறார். ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால் அவர் ராசிகளில் அதிக தாக்கத்தையும் ஏற்படுத்துகிறார். அவர் தற்போது வக்ர நிலையில் இருக்கிறார். நவம்பர் 4 அன்று அவர் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
ராசிகளில் தாக்கம்
அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் வக்ர நிவர்த்தியும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளுக்கு இது பல வித நன்மைகளை கொண்டு வரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அனுகூலமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் பல வித வெற்றிகளை காண்பார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி வக்ர நிவர்த்தியால் அமோகமான பலன்களை பெறவுள்ள ராசிகள்
சிம்ம ராசி
சனி பகவானின் வக்ர நிவர்த்தி சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். சனி பகவான் இவர்கள் மீது தனது ஆசியை பொழிவார். சிம்ம ராசியில் சஷ ராஜயோகம் உருவாகும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். சனி பகவானின் அருளால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையிலும் அதிகப்படியான மகிழ்ச்சி கிடைக்கும்.
மேலும் படிக்க | சனியின் அருளால் நவம்பர் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் ஆரம்பம்
மகர ராசி
நவம்பர் 4, 2023 முதல், சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவார். இது மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இவர்களது பொற்காலம் தொடங்க உள்ளது. இந்த நேரம் தொழில் ரீதியாக நல்லதாக இருக்கும். இந்த நேரத்தில் அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சனி பகவானின் அருளால் அனைத்து வேலைகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். ஆகையால் இந்த நேரத்தை நன்றாகப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
ரிஷப ராசி
சனி வக்ர நிவர்த்தியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைய பல வாய்ப்புகள் கிடைக்கும்.
அலுவலகம் அல்லது பணியிடத்தில் பதவி, கௌரவம் மற்றும் மரியாதையைப் பெறலாம். சனி பகவானின் ஆசீர்வாதம் ரிஷப ராசிக்காரர்கள் மீது நீடித்திருக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது அதிகப்படியான லாபம் கிடைக்கும். இது முதலீட்டிற்கு நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்கலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி ராசி
ஜோதிட சாஸ்திரப்படி, நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கப் போகிறது. இந்த நேரத்தில் சனி பகவான் வேலை மற்றும் வியாபாரத்தில் அதிக முன்னேற்றத்தைக் கொண்டு வரப் போகிறார். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பல வலுவான வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் முதலீட்டின் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ