சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அக்டோபர் மாதம் அமர்க்களமாய் இருக்கும்

Sukran Peyarchi: சிம்ம ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2023, 05:36 PM IST
  • அக்டோபர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் அதிகரிக்கும்.
  • மேலும், பொருளாதார நிலையும் மேம்படும்.
  • அலுவலத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அக்டோபர் மாதம் அமர்க்களமாய் இருக்கும் title=

Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தின் படி, செல்வம், பெருமை, காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்ற நிலையில் இருந்தால், அவருக்கு அனைத்து விதமான உலக இன்பங்களும் கிடைக்கும். இது தவிர, அவரது காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். அதே சமயம் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்த நிலையில் இருந்தால், அந்த நபரின் மகிழ்ச்சி குறையும். 

தற்போது சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். விரைவில் சுக்கிரன் கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சுக்கிரன் அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை 1:02 மணிக்கு கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். 32 நாட்கள் அவர் இந்த ராசியில் இருப்பார். சிம்ம ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்:

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், வாழ்க்கைத் துணையுடன் மகிழ்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் வாழ்க்கைத் துணையின் பாசத்தையும் அன்பையும் பெறுவீர்கள். இருவருக்கும் இடையிலான உறவு வலுவாக இருக்கும். உங்கள் உறவை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம்.

ரிஷப ராசி:

அக்டோபரில் சுக்கிரன் சிம்மத்தில் நுழைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள காரியங்களிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசைகள் நிறைவேறும், நிதி நிலை மேம்படும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சிம்ம ராசி:

அக்டோபரில் சிம்மத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஆசைகள் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன. திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல செய்திகள் கிடைக்கலாம். சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

துலா ராசி

சிம்ம ராசியில் சுக்கிரனின் பிரவேசம் (Venus Transit) துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களின் தொடக்கத்தைக் குறிக்கும். வருமானம் அதிகரிக்கும். வருமான வீட்டில் வியாழன் மற்றும் சுக்கிரன் இருப்பது மகிழ்ச்சியைத் தரும். இந்த ராசிக்காரர்களின் காதல் உறவுகள் வலுவடையும். சுக்கிரனின் அம்சத்தால் இவர்கள் காதலில் வெற்றி பெறுவார்கள். இந்த காலகட்டத்தில், திருமண வாய்ப்புகள் உருவாகின்றன.

கும்ப ராசி

அக்டோபர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் அதிகரிக்கும். மேலும், பொருளாதார நிலையும் மேம்படும். கும்ப ராசிக்கு ஏழாவது வீட்டில் சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிரன் இருப்பது இவர்களின் காதல் உறவில் இனிமையை ஏற்படுத்தும். அலுவலத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | சனியால் அக்டோபர் 15 வரை இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News