சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதமும் கஷ்ட காலம் தான்!

Shani Vakri 2023: சனியின் வக்ர நிலை காரணமாக, இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். அந்த ராசிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 9, 2023, 07:17 PM IST
  • வரும் ஜூன் 17ஆம் தேதி கும்பத்தில் சனி வக்ர பெயர்ச்சியடைகிறார்.
  • நவம்பர் 4ஆம் தேதி வரை சனி அந்த நிலையில் இருப்பார்.
  • இந்த நேரத்தில் இந்த 5 ராசிக்காரர்கள், ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும்.
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அடுத்த 5 மாதமும் கஷ்ட காலம் தான்! title=

Shani Vakri 2023: வேத ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு ஒரு சிறப்பு இடமுண்டு. இதனுடன், அது பாவ கிரகம் என்றும் அழைக்கப்படுகின்றது. வரும் ஜூன் 17ஆம் தேதி கும்ப ராசியில் சனிபகவான் வக்ர பெயர்ச்சியடைகிறார். 

வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை, கும்ப ராசியில் சனி பகவான் வக்ர நிலையிலேயே இருப்பார். நவம்பர் 4ஆம் தேதி காலை 8:26 மணிக்கு சனி நேராக மாறுகிறார். சனியின் சஞ்சாரம் காரணமாக 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். இதனுடன், இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்படியானால் இந்த ராசிகள் எவை என்று இங்கு தெரிந்து கொள்வோம்.

இந்த ஐந்து ராசிகள் அடுத்த ஐந்து மாதங்களுக்கு மிக கவனமாக இருக்க வேண்டும்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் சனியின் வக்ர நிலையில், கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலையில் தடைகள் வரலாம். பண நஷ்டம் ஏற்படுவதுடன் உங்கள் திருமண வாழ்வில் வாக்குவாதமும் ஏற்படலாம்.

மேலும் படிக்க | சனியால் உருவாகிறது கேந்திர திரிகோண யோகம், இந்த ராசிகளுக்கு லாட்டரி

ரிஷபம் 

சனியின் வக்ர நிலை ரிஷப ராசியினருக்கு கூட நல்லதாக கருதப்படுவதில்லை. இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். இந்த நேரம் முதலீட்டிற்கு ஏற்றதாக இல்லை. வரும் 139 நாட்களுக்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

கடகம் 

கடக ராசிக்காரர்கள் சனி வக்கிர காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் மீது சனியின் பார்வை இருக்கும். அது உங்கள் வாழ்க்கையை பாதிக்கும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். இந்த ராசிக்காரர்கள் விவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சனி வக்ர காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரம் உங்களுக்கு தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். வியாபாரம் செய்பவர்கள் சற்று யோசித்து முடிவெடுப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சனியின் வக்ர நிலையால் எதிர்மறையான விளைவுகளைக் காண்பார்கள். இந்த நேரத்தில் நீங்கள் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், இல்லையெனில் விஷயங்கள் மோசமாகிவிடும்.

மேலும் படிக்க | 12 ஆண்டு... குருவால் இந்த ராசிகளுக்கு கவனம் தேவை, மன அழுத்தம் அதிகரிக்கும்: முழு ராசிபலன் இதோ

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News