சனி ராசியில் திரிகிரஹி யோகம்! 3 ராசிகளுக்கு பண மழை கொட்டும்

Shani Surya Budh Yuti 2023: பிப்ரவரி 27 அன்று, சனியின் ராசியான கும்பத்தில் புதன் பெயர்ச்சியானார். இப்படி கும்ப ராசியில் சனி, சூரியன், புதன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகி உள்ளது இதனால் 3 ராசிக்காரர்களுக்கு பலமான பலன்கள் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 2, 2023, 02:23 PM IST
  • கும்பத்தில் திரிகிரஹி யோகம் உருவாகிறது.
  • கும்ப ராசியில் சனி, சூரியன், புதன் சேர்க்கை
  • கும்ப ராசியில் திரிகிரஹி யோகத்தின் பலன்
சனி ராசியில் திரிகிரஹி யோகம்! 3 ராசிகளுக்கு பண மழை கொட்டும் title=

கும்ப ராசி 2023 இல் திரிகிரஹி யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக் கொள்ளும். இதனுடன், கிரக பெயர்ச்சி உருவாக்கி மற்ற கிரகங்களுடன் கூட்டணியை உருவாக்கும். இதன் காரணமாக பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் சனியின் மூல முக்கோண ராசியான கும்பத்தில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னதாக ஜனவரி 17ஆம் சனி கும்பத்தில் பெயர்ச்சியானார். மேலும் பிப்ரவரி 14 ஆம் தேதி, சூரியன் சனியுடன் கும்ப ராசியில் சேர்க்கையானார், பிப்ரவரி 27 ஆம் தேதி, புதனும் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். இதன் காரணமாக கும்ப ராசியில் சனி, சூரியன், புதன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகி வருகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் மிகவும் சாதகமாக அமையப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

கும்ப ராசியில் திரிகிரஹி யோகத்தின் பலன்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் திரிகிரஹி யோகம் சுப பலனை தரும். இவர்களுக்கு பண வரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு இது சிறந்த நேரமாக அமையும். பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | காதலுக்கு ஜே சொல்ல வருகிறார் மேஷத்தில் சுக்கிரன்! வாழ்க்கையை இனிப்பாக்கும் சுக்கிரப் பெயர்ச்சி

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி-புதன்-சூரியன் சேர்க்கை மிகுந்த பலனைத் தரும். இவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பெருக்கலாம். பொருளாதார முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்: சனி, சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் திரிகிரஹி யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்கலாம். இந்த நேரம் வணிகர்களுக்கு மிகவும் சாதகமானதாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணத்தால் ஆதாயம் கிடைக்கும், ஆனால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட மறக்காதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News