காதலுக்கு ஜே சொல்ல வருகிறார் மேஷத்தில் சுக்கிரன்! வாழ்க்கையை இனிப்பாக்கும் சுக்கிரப் பெயர்ச்சி

Shukra Gochar 2023: மேஷத்திற்கு பெயரும் சுக்கிரன், செல்வம், கல்வி, சுகபோகங்கள், காதல், காமம், அன்பு, பண்பு என பல விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார். இன்னும் 11 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றங்கள் நேரிடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 1, 2023, 07:18 AM IST
  • பலன் தரும் சுக்கிரனின் மேஷ ராசி பெயர்ச்சி
  • செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன்!
  • காதலுக்கு கை கொடுக்கும் காதல் மன்னன்
காதலுக்கு ஜே சொல்ல வருகிறார் மேஷத்தில் சுக்கிரன்! வாழ்க்கையை இனிப்பாக்கும் சுக்கிரப் பெயர்ச்சி title=

Venus Transit in Aries: அசுரர்களின் குருவும், வாழ்க்கையை வளமாகவும் நிம்மதியாகவும் வாழ வழி செய்யும் சுக்கிரன் மார்ச் 12, 2023 அன்று காலை 08:13 மணிக்கு மீனத்தில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்கிறார். சுக்கிரனின் பெயர்ச்சி வெவ்வேறு ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களை கொடுக்கும். மேஷத்திற்கு பெயரும் சுக்கிரன், செல்வம், கல்வி, சுகபோகங்கள், காதல், காமம், அன்பு, பண்பு என பல குணாதிசயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துபவர். இவ்வளவு ஆற்றல் பெற்ற சுக்கிரன் வலுவடைந்தால் சிலருக்கு நல்லது என்றால், நீச்சமடைந்தால் அது பலருக்கு கெடுதல் ஆகும்.

சுக்கிரன் பெயர்ச்சியால் சுகபோகத்தை அடையும் ராசிகள்

மேஷம்
மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தாரின் அன்பையும் பாசத்தையும் பெறுவார்கள். தங்கள் மீதான கவனத்தையும், அக்கறையையும் ஏற்படுத்தும் மாற்றமாக இது இருக்கும். சுய புரிதல், சுய மேம்பாடு என தங்களைப் பற்றியும், தங்களுடைய இன்ப துன்பங்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்கத் தொடங்கும் நேரம் இது. சமூகத்தில் பிரபலமாகும் அளவுக்கு தங்கள் ஆளுமையை இனிமையாகவும் கவர்ச்சியாகவும் மாற்றும் எண்ணம் உருவாகும்.

திருமணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும், காதல் இனிக்கும், திருமணம் ஆனவர்களுக்கு குடும்பத்திலும், வாழ்க்கைத் துணையிடம் இருந்தும் அன்பும் ஆதரவும் கிடைக்கும். காதல் மன்னன் சுக்கிரன், காதலையும் சுகத்தையும் கூட்டிக் கொடுப்பார்.

மேலும் படிக்க | Rahu Transit 2023: 3 ராசிகளின் நிம்மதியைக் கெடுக்க வரும் ராகு பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

மிதுனம்
மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறுவதால், மிதுன ராசியினருக்கு நிதி ஆதாயங்கள் அபாரமாக கிடைக்கும் என்றால், குடும்ப உறவுகள் தந்தைவழி சொந்தங்கள் என உறவுகளிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்தும். பல பொருள் சார்ந்த ஆசைகளையும் நிறைவேற்றும் சுக்கிரப் பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்களின் தொழிலை சிறக்க வைப்பார். தொழில் செய்பவர்களுக்கு உகந்த நேரம் என்றால், பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். காதல் செய்ய ஏற்ற காலம் இது.

கடகம்
மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சாரம், வீட்டுப் பொறுப்புகள் அதிகரித்தாலும், அது சுபமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். கடக ராசிப் பெண்களுக்கு சாதகமான நேரம் இது. சுக்கிரனின் சஞ்சாரத்தின் போது வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்குக்ம். வீட்டிற்கு புதிய வாகனம் அல்லது ஏதேனும் ஆடம்பரப் பொருட்களை வாங்க இது நல்ல நேரம், உங்கள் வீட்டைப் புதுப்பிக்க சிறிது பணம் செலவழிக்கலாம். 

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் தர்மம், தந்தை, தொலைதூர பயணம், யாத்திரை, அதிர்ஷ்டம் போன்றவற்றில் சஞ்சரிக்கிறார். எனவே மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று கூறலாம், குறிப்பாக புதிதாக திருமணமான சிம்ம ராசிக்காரர்களுக்கு பெண் அதிர்ஷ்டம். அதிகரிக்கும்.

தொழில் வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இது சாதகமான நேரம். வேலையின் காரணமாக நீங்கள் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது இளைய சகோதரர்களின் முழு ஒத்துழைப்பையும் அன்பையும் பெறுவார்கள்.

மேலும் படிக்க | மாசி மாத பெளர்ணமியன்று புதாதித்ய ராஜயோகத்தால் ஹோலி யோகம் பெறும் 2 ராசிக்காரர்கள்

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இது சாதகமான நேரம். திருமணம், காதல் உறவுகள் என வாழ்க்கையில் நல்ல சந்தர்ப்பங்களை சுக்கிரன் உருவாக்கித் தருவார். தொழில் செய்யும் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் போது பல்வேறு இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். இந்த காலகட்டத்தில்  எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.  

மகரம்
இது உங்களுக்கு சாதகமான நேரம். குடும்பச் சூழல் நேர்மறையாகவும் இனிமையாகவும் மாறும், தாயுடனான உறவு அன்பும் பாசமும் நிறைந்ததாக இருக்கும். வசதிக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் பணம் செலவழிப்பீர்கள். சொத்துக்களில் பணத்தை முதலீடு செய்ய இது நல்ல நேரம். தொழில் ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும் காலமாக இனிக்கும்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேஷத்தில் இணையும் சுக்ரன் -ராகு! பங்குனியில் பிரச்சனைகளை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News