வடக்கு வாசல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வரும்..! கோடீஸ்வர யோகம் உண்டு

வட திசையில் வாசல் இருந்தால் அது அடுத்த சந்ததியையும் வாழும் பாக்கியத்தை அளிக்கும் என்பதால் வடக்கு பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு துரதிர்ஷ்டம்? என்பதை பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2023, 04:49 PM IST
  • வடக்கு திசையில் வீடு கட்டினால் யோகம்
  • குறிப்பாக சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
  • பணம் கொட்டும், சந்ததி வேகமாக வளரும்
வடக்கு வாசல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வரும்..! கோடீஸ்வர யோகம் உண்டு title=

வாஸ்து என்பது ஓரு கட்டிடத்திற்கு உயிரோட்டம் தரும் விஷயம் ஆகும். வாஸ்து சாஸ்திரப்படி திசைகள் எட்டு ஆகும். அதில் வடக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் இருக்கும்போது நமக்கு இடப்புறம் உள்ள திசையாகும். இந்த திசைக்கு உரிய பாலகர் குபேர ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இது மிக முக்கியமான திசையாக கருதப்படுகின்றது. ஒரு வீடு என்றால் அதற்கென்று ஒரு நியதி உண்டு. இந்திந்த திசையில் இவை இவை இருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. வடக்கு பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு துரதிர்ஷ்டம்? என்பதை இங்கு காண்போம் வாருங்கள்.

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. செல்வம் பெற நமக்கு லக்ஷ்மி தேவியின் அருளும் அஷ்ட திக் பாலகரில் ஒருவரான அழகாபுரி மன்னரான, சிவனுக்கு வேண்டப்பட்டவரான குபேரனின் அனுக்கிரகமும் தேவை. குபேரனின் அருள் பெற அவர் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு வாசல் பார்த்த வீடு சிறப்பு. அது வாஸ்து முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். நவ நிதிகளுள் முக்கியமான சங்கநிதி மற்றும் பதும நிதியை தன்னுடன் வைத்திருக்கும் குபேரன் அருள் சக செல்வ வளத்தையும் பெற உதவும். 

புத்திர லாபம், கல்வி அறிவு, வியாபாரத்தில் வெற்றி மற்றும் மகிழ்ச்சி அளிக்கும். குபேரன் அன்னை மகாலட்சுமியின் அன்பையும் அருளையும் வென்றவர். திருப்பதி வெங்கடாசலபதிக்கு கடன் கொடுத்தவர். எனவே அவருக்குரிய திசையான வடக்கு வாசல் வீட்டை அனைவரும் விரும்புவார்கள். 

மேலும் படிக்க | ஜாக்பாட்! சனியால் இந்த 5 ராசிகளின் அதிர்ஷ்டம் நாளை முதல் மினுமினுக்கும்

வடக்கு பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டம்

வட திசையில் வாசல் இருந்தால் அது அடுத்த சந்ததியையும் வாழும் பாக்கியத்தை அளிக்கும். அங்கு வசிப்பவர்களின் கௌரவம் மேம்படும். செல்வத்தை பெருக்கும். அந்தஸ்தை உயர்த்ததும். சரி, இப்பொழுது வடக்கு திசை பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் என்று பார்ப்போம். பொதுவாக மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ராசிகளை ஜென்ம ராசியாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகாவோ கொண்டவர்கள் வடக்கு திசை வாசல் உள்ள வீட்டில் வசிக்கலாம். 

புதனுக்குரிய திசை வடக்கு ஆகும். எனவே புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு வட திசை யோகத்தை அளிக்கும். மேலும் புதன் கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் வட திசை வாசலை தேர்ந்து எடுக்கலாம். மேலும் கடகம் விருச்சகம் மீனம் ராசியில் புதனின் நட்சத்திரங்கள் இருப்பதால் இந்த ராசியினர் வட திசை வாசல் உள்ள வீட்டில் வசிப்பது யோகம் அளிக்கும்.

யாருக்கு யோகத்தை அளிக்காது?

ஒருவரின் ஜாதகத்தில் புதன் 6,8,12 ல் மறைந்து இருத்தல் அல்லது குரு 6,8,12 ல் மறைந்து இருத்தல் கூடாது. அவர்களுக்கு வடதிசை யோகம் அளிக்காது. மேலே குறிப்பிட்ட ராசி அல்லது லக்னத்தில் பாவர் அமர்வதோ, பாவர் சம்பந்தமோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பினும் வடதிசை வாசல் இருக்கும் வீடு யோகம் அளிக்காது. மேலே குறிப்பிடப்பட்ட ராசியாக இருந்து நேர்மையுடன், நியாயத்துடன் செயல்படாவிட்டாலும் யோகம் அளிக்காமல் துரதிர்ஷ்டத்தை சேர்க்கும். புதன் அல்லது குரு பாதகாதிபதி வீட்டில் அமர்ந்து இருந்தாலும் வடதிசை வாசல் யோகத்தை அளிக்காது எனலாம்.

மேலும் படிக்க | சனி ஜெயந்தி 2023: சனி தோஷம் சனி தோஷம் இருக்கா இந்த பரிகாரம் பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News