ஜனவரி கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு ஹை அலர்ட் காலம், எச்சரிக்கை தேவை

Unlucky Zodiacs of January 2023: கிரகங்களின் மாற்றங்கள் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ச்சிகளும் பாதிப்புகளும் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 21, 2022, 11:44 AM IST
  • கிரகங்களின் சஞ்சாரத்தால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதிப் பிரச்சனைகள் ஏற்படும்.
  • வேலை மாறுவதற்கு இது சரியான நேரம் அல்ல.
  • காதல் வாழ்க்கையும் சரியாக இருக்காது.
ஜனவரி கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு ஹை அலர்ட் காலம், எச்சரிக்கை தேவை title=

ஜனவரியில் கிரக மாற்றங்கள், ராசிகளில் அதன் தாக்கம்: இன்னும் சில நாட்களில் 2023 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவானின் பெயர்ச்சி நடக்கவுள்ளதால், ஜோதிட கணக்கீடுகளின் படி, இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக கருதப்படுகின்றது. சனி பகவான் கும்ப ராசிக்குள் பிரவேசிப்பார்.  புத்தாண்டு தொடக்கத்தில் சனிபகவான் தனது ராசியை மாற்றுவார். இதற்குப் பிறகு, சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றுவார்கள். ஜனவரி 14-ம் தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் சூரியன் ஜனவரி 22-ம் தேதி கும்ப ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய், புதன் ஆகிய கிரகங்களும் வக்ர நிவர்த்தி அடைந்து இயல்பு நிலைக்கு மாறுவார்கள். ஜனவரி 12 ஆம் தேதி செவ்வாயும், அதன் பின்னர் ஜனவரி 18 ஆம் தேதி புதனும் வக்ர நிவர்த்தி அடைவார்கள். 

கிரகங்களின் இந்த ராசி மற்றும் நிலை மாற்றங்கள் காரணமாக, 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ச்சிகளும் பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கிரக மாற்றங்களினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்: 

கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் மாற்றங்களால், மேஷ ராசிக்காரர்கள் வேலையில் சிரமங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். செலவுகள் கட்டுப்பாட்டை மீறும். உறவினர்களுடன் பரிவர்த்தனை தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படலாம். அலுவலகத்தில் வாக்குவாதம் ஏற்படக்கூடும். அனைத்து இடங்களிலும் பொறுமையை கடைபிடிப்பது மிக அவசியமாகும். குடும்ப விஷயத்திலும் மன அழுத்தம் ஏற்படும். செவ்வாய் தோறும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவது நல்லது.

கடகம்: 

ஆண்டின் முதல் மாதத்தில் ஏற்படவுள்ள கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் செலவழிக்கும் நேரம் இனிமையாக இருக்காது. டென்ஷன் அதிகரிக்கும். பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். ஆனால், அது உடனே செலவாகிவிடும். அற்ப விஷயங்களுக்கு கோபப்படுவார்கள். அதைத் தவிர்ப்பது நல்லது. உடல்நிலை விஷயத்திலும் ஏமாற்றம் ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யுங்கள்.

மேலும் படிக்க | இன்று இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! 

கன்னி: 

கிரகங்களின் சஞ்சாரத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் மேம்படும், ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் பெரிய பலன் இருக்காது. இந்த காலத்தில் பணத்தை முதலீடு செய்யாமல் இருந்தால் நல்லது. புதன் கிழமைதோறும் பசுவிற்கு கீரை அளித்தால் நல்லது நடக்கும். 

விருச்சிகம்: 

கிரகங்களின் சஞ்சாரத்தால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதிப் பிரச்சனைகள் ஏற்படும். வேலை மாறுவதற்கு இது சரியான நேரம் அல்ல. காதல் வாழ்க்கையும் சரியாக இருக்காது. சகோதரர்களுடன் சில விஷயங்களில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பழைய முதலீடுகளிலும் நஷ்டம் ஏற்படலாம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் பல முறை யோசிப்பது நல்லது. செம்புப் பாத்திரத்தில் வெல்லத்தை வைத்து தினமும் சூரியனுக்கு அர்க்கியம் விடுவது நன்மை பயக்கும். 

கும்பம்: 

ஜனவரியில் சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கப் போவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் சுற்று தொடங்கும். உத்தியோகத்தில் அதிக கவனத்துடன் இருப்பதுடன் உடல் நலத்திலும் அக்கறை காட்டவும். முதலாளியிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள், கோவத்தை கட்டுப்படுத்துங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயரின் கோவிலுக்கு செல்வதும் அனுமன் சாலிசாவைப் படிப்பதும் நன்மை பயக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அஸ்வினி நட்சத்திரத்தில் பிறக்கும் புத்தாண்டு! 3 ராசிகளுக்கு சூரியனின் அருள் உறுதி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News