2வது டி20: ஆஸ்தி., வெற்றி பெற 119 ரன்கள்; இந்தியா 118/10

Last Updated : Oct 10, 2017, 08:51 PM IST
2வது டி20: ஆஸ்தி., வெற்றி பெற 119 ரன்கள்; இந்தியா 118/10 title=

டாஸ் வென்றத ஆஸ்திரேலியா பீல்டிங்கினை தேர்வு செய்தனர். தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலே முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடர்ந்து முதல் மூன்று ஓவருக்கு மூன்று விக்கெடை இழந்தது. ரோஹித் ஷர்மா 8(4), விராத் கோலி 0(2), மனிஷ் பாண்டே 6(7) ரன்களில் அவுட் ஆனார்கள். பின்னர் ஷிகர் தவான் 2(6) ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் அவுட் ஆனார். ஐந்து ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. கெதர் ஜாதவ் மற்றும் டோனி ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்கள் இருந்த போது எம் எஸ் டோனி 13(16) அவுட் ஆனர். நன்றாக விளையாடி வந்த கெதர் ஜாதவ் 27(27) ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். அதன் பிறகு வந்த புவனேஷ்வர் குமார் 1(6) ரன்னில் கேட்ச் அவுட் ஆனர். ஹர்திக் பாண்டியா 25(23) அவுட் ஆனார். ஜஸ்பிரிட் பும்ரா 7(9) ரன்னில் அவுட் ஆனார். கடைசி பந்தில் குல்தீப் யாதன் 16(19) கேட்ச் அவுட் ஆனர். யூசுவெந்திர சஹால் 3(2) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.

இந்தியா 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழந்து 118 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 119 ரன்கள் தேவை.

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. 

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் முதல் போட்டி அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் நடந்தது. அப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 எனும் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி கௌகாத்தியில் நடைபெறுகிறது. 

இப்போட்டி மாலை 7 மணியளவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்றத ஆஸ்திரேலியா பீல்டிங்கினை தேர்வு செய்துள்ளனர்!

Trending News