2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா அம்பதி ராயுடு? பரபரக்கும் அரசியல் களம்

Ambati Rayudu And Politics: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் அம்பதி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் களமிறங்க உள்ளார் என்றும், அவர் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 17, 2023, 04:16 PM IST
  • கிரிக்கெட்டர் அம்பதி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு
  • அரசியலில் களமிறங்கும் சிஎஸ்கே வீரர்
  • அரசியலில் காலடி எடுத்து வைக்கும் அம்படி ராயுடு
2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா அம்பதி ராயுடு? பரபரக்கும் அரசியல் களம் title=

புதுடெல்லி: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திரம் அம்பதி ராயுடு தனது ஓய்வை அறிவித்தார். சிஎஸ்கே பேட்டர், எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார், அவரது இந்த அசுர விளையாட்டு, இறுதியில் சிஎஸ்கே ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவியது.

கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு, ராயுடு அரசியலில் களமிறங்க உள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திகளின்படி, ராயுடு ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா அல்லது குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

 "அம்படி ராயுடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் பொன்னூர் அல்லது குண்டூர் மேற்குத் தொகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பரிந்துரைத்துள்ளனர்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.

மேலும் படிக்க | தண்ணீருக்குள் திடீரென குதித்த ரோஹித் சர்மா... அதுவும் மனைவிக்காக - ஏன் தெரியுமா?

அன்படி ராயுடு கடந்த வாரம் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இரண்டு முறை சந்தித்தார், இது அவரது அரசியல் வாழ்க்கை குறித்த ஊகங்களையும் எழுப்பியது.

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை புகழ்ந்து பேசிய 37 வயதான அம்படி ராயுடு, "முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஒரு பெரிய உத்வேகமாக இருக்கிறார். அவர் ஒரு பகுதியில் கவனம் செலுத்தாமல் அனைத்து பிராந்தியங்களிலும் வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறார்" என்று கூறியிருந்தார்.

2019 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இந்திய கேப்டன் விராட் கோலி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பல நாடுகளின் போட்டிக்கான 'மென் இன் ப்ளூ' அணியில் அம்பதி ராயுடு நம்பர் 4 ஸ்லாட் பெறுவது உறுதி என்று கூறினார். இருப்பினும், மார்கியூ போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டபோது, ராயுடுவின் பெயர் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

மேலும் படிக்க | Ashes 2023: இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மீண்டும் ஆஷஸ் தொடரை கைப்பற்றுமா?

தனது ஏமாற்றத்தை ட்வீட் மூலம் வெளிப்படுத்தினார், இது இணையம் முழுவதும் வைரலானது. அவர் தனது ட்வீட்டில், "உலகக் கோப்பையைப் பார்க்க புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்தேன்" என்று எழுதினார். இது, பிசிசிஐ அதிகாரிகளுக்கு எரிச்சலை மூட்டியதால், அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.

அந்த சர்ச்சைக்குப் பிறகு, ராயுடு இறுதியாக தனது தேர்வு சர்ச்சையைப் பற்றி திறந்துள்ளார்.

"எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் நான் தேர்வுக் குழுவின் உறுப்பினருடன் விளையாடியபோது எனக்கு சில சிக்கல்கள் இருந்தன, 2019 உலகக் கோப்பையில் நான் அணியில் இருந்து வெளியேற இது ஒரு காரணமாக இருக்கலாம்" என்று ராயுடு TV9 தெலுங்கு நிருபரிடம் கூறினார்.

அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸின் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் விளையாடியதுடன் தான் ஓய்வு பெறுவது உறுதி என்றும், இந்த முறை என்னுடைய முடிவில் "யு-டர்ன்" இருக்காது என்றும் அம்படி ராயுடு தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | அகமதாபாத் பிட்சில் பேயா இருக்கிறது? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஷாகித் அப்ரிடி சரமாரி கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News