Shreyas on AUS vs IND: இந்தியாவின் சொதப்பலுக்கு காரணம் இதுதான்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி ODI போட்டித் தொடரை இழந்துவிட்டது. இது ரசிகர்களுக்கு வருத்தங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) என்ன சொன்னார் தெரியுமா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2020, 05:21 PM IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ODIகளில் இந்திய பெளலர்கள் ஏமாற்றம் அளித்தனர்
  • IPLஇல் இந்திய பந்து வீச்சாளர்கள் அதிகளவில் T20 கிரிக்கெட்டை விளையாடினர்
  • இன்று நடைபெறும் கடைசி ODI, கான்பெர்ராவின் மனுகா ஓவலில் நடைபெறுகிறது
Shreyas on AUS vs IND: இந்தியாவின் சொதப்பலுக்கு காரணம் இதுதான் title=

கான்பரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி 374/6 மற்றும் 389/4 என்ற ஸ்கோரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.  

ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சமன் செய்ய டீம் இந்தியா தவறிவிட்டது, ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் 50 ஓவர்களில் 389/4 என்ற ஸ்கோரை எடுக்கச் செய்ததற்கு காரணம் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.  

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) உட்பட பெளலர்களின் (bowlers) வேகப்பந்து வீச்சுக்கு பதிலடி கொடுத்த ஐந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் அடித்தனர். இரண்டு ஆட்டங்களிலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே அதிக ரன்களை கொடுத்துவிட்டனர்.  

இந்திய பெளலர்கள், 20-20 என்ற கிரிக்கெட் வடிவத்தில் இருந்து ஒருநாள் போட்டிகளின் வடிவத்திற்கு மாறும் கட்டத்தில் இருப்பதால் இந்த சிக்கல் எழுந்த்து. ஆனால், எதிர்வரவிருக்கும்  போட்டிகளில் வலுவாக வருவார்கள் என்று ஷ்ரேயஸ் ஐயர் (Shreyas Iyer) கூறுகிறார்.

"கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்படாததற்கான காரணங்கள் குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இது 20-20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து ஒருநாள் போட்டிகளுக்கு மாறும் கட்டம் என்று நான் நம்புகிறேன், மேலும் 10 ஓவர்களை ஒரு பெளலர்கள் ஒன்றுபோலவே வீசுவது மிகவும் கடினம் " என்று ஸ்ரேயஸ் ஐயர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு virtual press conference-ஆக நடைபெற்றது.

மேலும், 50 ஓவர்களில் பீல்டிங் செய்வதும் எளிதானது அல்ல, இனி இந்திய வீரர்கள் நேர்மறையான மனநிலையுடன் வலுவாக வருவார்கள் என்று நம்புகிறேன்”என்று ஐயர் மேலும் கூறினார். தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் விராட் கோலியும் அணியினரும் sixth bowling option என்ற தெரிவை   தவறவிட்டனர்.

Also Read | ரோஹித் ஷர்மாவுக்கு சிக்கல், கோலி, சாஸ்திரியுடன் BCCI ஆலோசனை

ஆறாவது பந்துவீச்சு தெரிவு என்ற பொருள்படும் sixth bowling option என்ற தெரிவை பயன்படுத்திக் கொள்ளாத சில மூத்த பேட்ஸ்மேன்களைப் பற்றியும் ஐயர் கூறினார், "இந்த விருப்ப நடைமுறையை எங்களுக்கு இருந்தது. எங்கள் பந்து வீச்சாளர்களில் சிலர் பயிற்சிக்கு சென்றனர், சில பேட்ஸ்மேன்களும் இந்த பயிற்சிக்கு சென்றனர்".

தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டம் (quarantine phase) மிகவும் கடினமாக இருந்தது என்பதை ஒப்புக் கொண்ட ஸ்ரேயஸ் ஐயர், "நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது தனிமைப்படுத்தல் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. 14 நாட்கள் அறையில் தங்கியிருந்தோம். பயிற்சிக்கு மட்டும் வெளியே சென்றோம், ஆனால் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருந்ததால் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று ஐயர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது ODI-இல் இந்தியா வெற்றி பெற்றால், அது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் அடுத்த போட்டித்தொடர்களை எதிர்கொள்வதில் மனவுறுதியை அளிக்கும்.

Also Read | விராட் கோலி துரிதமாக 22,000 சர்வதேச ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News