விராட் கோலி துரிதமாக 22,000 சர்வதேச ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்

இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்களைக் கடந்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது கோஹ்லி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2020, 07:21 PM IST
  • விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்களைக் கடந்த அதிவேக பேட்ஸ்மேன்
  • 418 போட்டிகள் மற்றும் 462 இன்னிங்ஸில் விளையாடி இந்தப் பட்டியலில் இடம் பிடித்தார் கோஹ்லி
  • இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Tendulkar) தற்போது 34,357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்
விராட் கோலி துரிதமாக 22,000 சர்வதேச ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்  title=

புதுடெல்லி: இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்களைக் கடந்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது கோஹ்லி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் எடுத்த கோஹ்லி, இந்த போட்டியில்  இன்னும் 11 ரன்கள் மட்டும் எடுத்திருந்தால் 44 சதங்கள் என்ற பதிவையும் ஏற்படுத்தியிருப்பார்.   
கோஹ்லி வெறும் 418 போட்டிகள் மற்றும் 462 இன்னிங்ஸில் விளையாடி இந்தப் பட்டியலில்  இடம் பிடித்தார் கோஹ்லி.

Read Also | Australia vs India: எதிரும் புதிருமாய் களத்தில் இருந்தாலும் காதல் களம் ஒன்றே

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Tendulkar) தற்போது 34,357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார், குமார் சங்கக்காரா (Kumar Sangakkara) 28,016, ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) 27,483, ஜெயவர்தன (Jayawardene) 25,957, ஜாக் காலிஸ் (Jack Kallis) 25,534, ராகுல் டிராவிட் (Rahul Dravid) 24,208, பிரெயின் லாரா (Brain Lara) 22,358 ரன்கள் எடுத்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் கோஹ்லி 22,011 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 11,977, டெஸ்ட் போட்டிகளில் 7,240, மற்றும் டி 20 போட்டிகளில் 2,794 ரன்கள் எடுத்துள்ளார்.
50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்ட, விராட் கோலி வெறும் ஆறு சதம் எடுத்தால் போதும்.  

Also Read | இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் Sledging செய்வார்கள்

உலகின் அதிவேக 22,000 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை விராட் கோலி சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நிகழ்த்தினார். ஆனால், அந்த போட்டியில் இந்தியா தோற்றுப்போனது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.

2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்தியா தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் அணியின் தோல்வியின் சுமையை சுமக்கும் கேப்டன் விராட்டுக்கு சர்வதேச சாதனை ஒரு ஆறுதலாக இருக்கலாம்.  

Read Also | விராட் கோலி ஒரு மோசமான கேப்டன் அல்ல, ஆனால் ரோஹித் சர்மா சிறந்தவர்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News