BCCI on T20I: அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 2 கூடுதல் T20 போட்டிகள்!?

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் இரண்டு கூடுதல் டி 20 போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்க பிசிசிஐ தயாராகிறது! காரணம் இதுதான்…  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2021, 07:53 AM IST
  • ஒத்திவைக்கப்பட்ட மான்செஸ்டர் டெஸ்ட் நடைபெறுமா?
  • அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 2 கூடுதல் டி20 போட்டிகளில் இந்தியா விளையாடத் தயார்
  • பிசிசிஐ சலுகையை முன்வைக்கிறது
BCCI on T20I: அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 2 கூடுதல் T20 போட்டிகள்!?  title=

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணியில் பலருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டது.

முதலில் ரவி சாஸ்திரிக்கு தொற்று உறுதியாக, அதையடுத்து, பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகியோரும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டனர்.

ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறவிருந்த ஐந்தாவது டெஸ்டுக்கு முன்னதாக, உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பர்மருக்கும் கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டது. எனவே மான்செஸ்டரில் நடைபெறவிருந்த ஐந்தாவது  டெஸ்ட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Also Read | லண்டனில் தனது புத்தக வெளியீட்டை நியாயப்படுத்தும் இந்திய கோச்

மான்செஸ்டர் டெஸ்ட் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது. 

தற்போது ஐந்தாவது டெஸ்ட் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பிசிசிஐக்கு பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த வார இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளதால், திட்டமிட்டபடி இந்திய அணி வீரர்கள் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றால் சிக்கலை எதிர்கொள்வார்கள்.  

ஐந்தாவது டெஸ்ட் போட்டி தொடர்பாக  சமரசமாக முடிவெடுக்கப்பட்டால் பிசிசிஐக்கு சிக்கல்கள் குறையும். அதற்கு, இந்தப் போட்டித்தொடர் தொடர்பான சமரச முடிவு ஏற்பட வேண்டும். அதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (England and Wales Cricket Board) ஒப்புக்கொள்ள வேண்டும்.

ALSO READ | இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ஆகிறார் தோனி?

டெஸ்ட் போட்டி ரத்தானதற்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புத்தக வெளியீடு நிகழ்ச்சி தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பயோ பபிள் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து அவரும், இந்திய அணியினரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது தான் வீரர்களுக்கு கோவிட் பரவ காரணமானது என்று கூறப்படுகிறது. 

எது எப்படியிருந்தாலும், இந்த சிக்கலை பிசிசிஐ தீர்த்துதான் ஆக வேண்டும். அதற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு சில சலுகைகளை கொடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்வந்துள்ளது. அடுத்த ஆண்டு, இங்கிலாந்தில் இரண்டு கூடுதல் டி 20 போட்டிகள் விளையாட ஒப்புக் கொள்வதாக இந்திய தரப்பு கூறுகிறது.

இது பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டியை சமரசமாக தீர்க்க ஈசிபி ஒப்புக்கொண்டால் இரண்டு கூடுதல் டி 20 போட்டிகளுக்கான சலுகை கொடுக்கப்படும் என்று உறுதி செய்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்குக் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய, ஜூலை 2022 இல் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இரண்டு கூடுதல் டி 20 களில் விளையாட முன்வந்ததை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உறுதி செய்துள்ளது.  

"அடுத்த ஜூலை மாதம் நாங்கள் இங்கிலாந்துக்குச் செல்லும்போது இரண்டு கூடுதல் டி 20 களை விளையாடலாம் என்ற சலுகையை நாங்கள் முன்வைத்துள்ளோம். இந்த சலுகை வெள்ளை பந்து விளையாட்டுகளுக்கு மட்டுமே. அதேபோல, ஆஃப் டெஸ்ட் விளையாடலாம் என்ற தெரிவும் உள்ளது. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவர்களுடைய விருப்பம்" என்று ஷா தெரிவித்தார்.

READ ALSO | கொரோனா ஏற்படுத்திய சிக்கல்; India vs England 5வது டெஸ்ட் போட்டி ரத்து..!!

ஒத்தி வைக்கப்பட்ட டெஸ்ட் போட்டியை மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. "இருப்பினும், இந்த சலுகையானது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்கனவே உள்ள 40 மில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறையை எளிதாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று த டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இங்கிலாந்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செல்லும்போது, கூடுதலாக ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் என்ற விருப்பத் தெரிவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் விடப்பட்டுள்ளதாகவும் டெய்லி மெயில் கூறுகிறது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை ECB தேர்வுசெய்தால், அது தற்போதைய டெஸ்ட் போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டியாக இருக்கும்.

Also Read | இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட இப்போது வாய்ப்பே இல்லை"

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News