கொரோனா ஏற்படுத்திய சிக்கல்; India vs England 5வது டெஸ்ட் போட்டி ரத்து..!!

கொரோனா காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2021, 07:19 PM IST
கொரோனா ஏற்படுத்திய சிக்கல்;  India vs England 5வது டெஸ்ட் போட்டி ரத்து..!!

மான்செஸ்டர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கொரோனாவால் நெருக்கடி காரணமாக சிக்கலில் உள்ளது. மான்செஸ்டரில் வெள்ளிக்கிழமை தொடங்கும் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கும் நிலையில், 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், யாருக்கு கோப்பை என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மான்செஸ்டரில் நடைபெறும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ, இந்தியா தொடரை வென்று விடும். வியாழக்கிழமை, டீம் இந்தியாவின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பர்மாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டது, இதை அடுத்து, ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது.

ALSO READ | இந்திய அணிக்கு இனி அஷ்வின் தேவையில்லை- கிறிஸ் ட்ரெம்லெட் சர்ச்சை பதிவு

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது இந்தியாவின் வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக் கூடாது என்பதில் பிசிசிஐ கவனத்தில் கொண்டுள்ளது. இரண்டாவது கட்ட ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது, எனவே பிசிசிஐ அதனை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க விரும்பவில்லை. ஐந்தாவது டெஸ்ட் போட்டியை விளையாடாதது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ விவாதித்தபோது, ​​அவர்கள் ஒரு விசித்திரமான ஆப்ஷனை வழங்கினர். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தியா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றால், அது விளையாடாமல் இந்த போட்டியில் தோற்றதாக கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.

ALSO READ | லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

இந்நிலையில், பிசிசிஐ உடனான பேச்சு வார்த்தையை தொடர்ந்து, எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் இன்று தொடங்கவிருந்த ஐந்தாவது இந்தியா இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் உறுதிபடுத்தியது.  

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் வெளியிட்ட அறிக்கையில், "போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நாங்கள் ரசிகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற துறையினர் மன்னிக்க வேண்டும், இது பலருக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் இது குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் பகிரப்படும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொளப்பட்டது, பரிசோதனை அறிக்கை நெகடிவ் என வந்துள்ள போதிலும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி  முன்னதாக இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. யாருக்கு கோப்ப்பை என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை

ALSO READ | முதல் முறையாக சதம் அடித்து ரோகித் சர்மா அசத்தல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News