இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்படி ரிசர்வ் டே கொடுக்கலாம்? சர்ச்சைக்கு விளக்கம்

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுத்திருப்பது சர்ச்சையாகியிருக்கும் நிலையில் அது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை, வங்களாதேசம் கிரிக்கெட் வாரியங்கள் விளக்கம் கொடுத்துள்ளன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 9, 2023, 09:50 AM IST
  • இந்தியா - பாகிஸ்தான் மோதல்
  • அந்த போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே
  • கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்படி ரிசர்வ் டே கொடுக்கலாம்? சர்ச்சைக்கு விளக்கம் title=

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கியுள்ளன. முதல் சுற்றில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்திருக்கின்றன. இந்த சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டநிலையில், இந்தப் போட்டிக்கு மட்டும் பிரத்யேகமாக ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை மழை காரணமாக போட்டி ரத்தானால், அடுத்த நாள் போட்டி நடைபெறும். பாதி ஆட்டம் நடைபெற்று கைவிடப்பட்டால், முந்தைய நாள் போட்டி விட்ட இடத்தில் இருந்து அடுத்தநாள் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | உலகக் கோப்பையில் இந்த 2 வீரர்கள் இருந்திருக்கலாம்... இந்திய அணி குறித்து மூத்த வீரர் கருத்து!

இதற்கு வங்கதேசம் மற்றும் இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையல், அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களான இலங்கை மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரியங்கள் விளக்கம் கொடுத்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்பட்டது என்பது அனைத்து உறுப்பினர்களும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என விளக்கம் கொடுத்திருக்கின்றன.

இந்த விளக்கம் கிரிக்கெட் வட்டாரத்தில் மேலும் சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. போட்டியில் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் இந்தியா - பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் இந்த சலுகை கொடுக்கப்பட வேண்டும், இல்லையென்றால் யாருக்கும் கொடுக்கக்கூடாது என கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத் இது குறித்து டிவிட்டரில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டும் பிரத்யேகமாக ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருப்பது சுயநலத்துக்கு ஒப்பானது. கிரிக்கெட் போட்டிக்கு செய்யப்படும் அநீதி என்று விமர்சித்துள்ளார். இதனை ஏன் இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக் கொண்டன என கேள்வி எழுப்பியிருக்கும் அவர், தங்கள் நாட்டு அணிகள் போட்டி விளையாடும்போது இப்படியான சிக்கலில் மாட்டி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறாமல் போனால் என்ன செய்வார்கள்?. தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அடுத்த நாட்டு அணிகள் விளையாடும் போட்டிகள் மீது ஏன் அந்நாட்டு அணிகள் இந்தளவுக்கு இறங்கி வந்து கரிசனம் காட்டுகின்றன என்றும் விளாசியுள்ளார். அவரின் டிவிட்டர் பதிவுக்குப் பிறகு பலரும் இந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | இனி வாய்ப்பு கிடைக்காது! ஓய்வை அறிவிக்க போகும் முக்கிய வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News