2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நவம்பர் 15 புதன்கிழமை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலைப்படும் தகவல் ஒன்று வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதியபோது நடுவர்களாக இருந்த இரண்டு பேர் இப்போட்டியிலும் நடுவர்களாக பணியாற்ற இருக்கிறார்கள். உலக கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் ராட் டக்கர் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது போட்டியில் நிதின் மேனன் மற்றும் ரிச்சர்ட் கேட்டில்ப்ரோ கள நடுவர்களாக இருப்பார்கள்.
2019 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன்-பீல்ட் அம்பயராகவும் இல்லிங்வொர்த் இருந்தார். ஓல்ட் ட்ராஃபோர்டில் மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இரண்டு நாட்கள் நீடித்தது. நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டக்கர் மூன்றாவது நடுவராக இருந்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் டக்கரின் 100வது ஒருநாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் ஜோயல் வில்சன் மூன்றாவது நடுவராகவும், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் நான்காவது நடுவராகவும், ஆண்டி பைகிராஃப்ட் போட்டி நடுவராகவும் இருப்பார்கள்.
இல்லிங்வொர்த் நடுவர்
இது மட்டுமின்றி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 போட்டிக்கும் நடுவராக இல்லிங்வொர்த் இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும், நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் நடுவராகவும் இருந்தார். இதில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இது சற்று நிம்மதி தரும் விஷயம். அதேநேரத்தில் அவர்கள் நடுவர்களாக இருக்கும்போது 2019 ஆம் ஆண்டு இந்திய அணி தோல்வியை தழுவியதுபோல் இம்முறையும் நடைபெற கூடாது என்பதே இந்தியகிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
மறுபுறம், இரண்டாவது அரையிறுதிக்கு நியமிக்கப்பட்ட Cattlebrough, நடப்பு உலகக் கோப்பையின் போது ODIகளில் நடுவராக 100 போட்டிகளை ஏற்கனவே நிறைவு செய்தார். அக்டோபர் 21ஆம் திகதி நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் நடுவராக அவர் இருக்கிறார். இந்திய வீரர் நிதின் மேனன் முதல் முறையாக உலகக் கோப்பை நடுவராக ஆன்-பீல்ட் அம்பயராக உள்ளார். இந்தப் போட்டியில் மூன்றாவது நடுவராக கிறிஸ் கஃபானியும், நான்காவது நடுவராக மைக்கேல் கோஃப் மற்றும் போட்டி நடுவராக இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் செயல்படுவார்கள்.
முதல் அரையிறுதி: இந்தியா vs நியூசிலாந்து, நவம்பர் 15, மும்பை
கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ராட் டக்கர்
மூன்றாவது நடுவர்: ஜோயல் வில்சன்
நான்காவது நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட்
இரண்டாவது அரையிறுதி: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, நவம்பர் 16, கொல்கத்தா
கள நடுவர்கள்: ரிச்சர்ட் கேட்டில்ப்ரோ மற்றும் நிதின் மேனன்
மூன்றாவது நடுவர்: கிறிஸ் கஃபானி
நான்காவது நடுவர்: மைக்கேல் கோஃப்
போட்டி நடுவர்: ஜவகல் ஸ்ரீநாத்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ