IND vs NZ: இப்படி செய்யலாமா? இந்திய அணிக்காக பிட்சை மாற்றிய பிசிசிஐ - ஐசிசி அதிருப்தி

உலக கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெறும் பிட்சை இந்திய அணிக்கு சாதகமாக்கும் வகையில் இரவோடு இரவாக பிசிசிஐ மாற்றியிருப்பதாக ஐசிசி மைதான மேற்பார்வையாளர் குற்றம்சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 15, 2023, 12:08 PM IST
  • அரையிறுதிப்போட்டி பிட்ச் திடீரென மாற்றம்
  • அதிருப்தியில் ஐசிசி - நியூசிலாந்து ஏமாற்றம்
  • பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என கணிப்பு
IND vs NZ: இப்படி செய்யலாமா? இந்திய அணிக்காக பிட்சை மாற்றிய பிசிசிஐ - ஐசிசி அதிருப்தி title=

இந்தியா - நியூசிலாந்து அணிகள் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மல்லுக்கட்ட உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், இந்திய அணிக்கு சாதகமாக இப்போது பிட்ச் மாற்றப்பட்டிருப்பதாக பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஐசிசி மைதான மேற்பார்வையாளர் அட்கின்சன் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு ஏழாம் நம்பர் பிட்சை பயன்படுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு ஏற்ப பிட்ச் வான்கடேவில் தயார் செய்யப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு மைதானத்துக்கு நேரில் வந்து பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு, பிட்சில் அதிக புற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | 400 ரன்களை குவித்த இந்தியா - ராகுல், ஸ்ரேயாஸ் சதம் ... நெதர்லாந்து பவுலரும் சதம்..!

உடனடியாக மைதான ஊழியர்களிடம் பிட்சில் இருக்கும் புற்களை அகற்றுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். இதுவே பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. ஏனென்றால் போட்டி நடத்தும் நாடு தங்களுக்கு சாதகமாக பிட்சை அமைக்குமாறு வற்புறுத்துவது சரியான அணுகுமுறை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் தான் இந்தியா - நியூசிலாந்து விளையாடும் பிட்சும் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. பிசிசிஐ இரவோடு இரவாக இந்த தகவலை ஐசிசிக்கு தெரிவித்திருக்கிறது. இதற்கு ஐசிசி மைதான மேற்பார்வையாளர் அட்கின்சன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். உலக கோப்பையை நடத்தும் நாடு தங்களுக்கு சாதகமாக எப்படி பிட்சை மாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிருப்தியையும் ஐசிசிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளாராம். 

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஊடகங்களில் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கான பிட்ச் மாற்றப்பட்டிருப்பது பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளன. இப்போது மும்பை வான்கடேவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடும் பிட்ச் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடத்தப்பட்ட பிட்ச் ஆகும். தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து, இந்தியா - இலங்கை போட்டிகள் இந்த பிட்சில் தான் நடத்தப்பட்டன. ஆறாம் நம்பர் கொண்ட இந்த பிட்சில் இந்திய அணி ஏற்கனவே விளையாடி இருப்பதால், அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற முனைப்பில் இப்படியொரு முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.   

இந்திய அணி தங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் பிட்ச் அமைத்து  இந்த உலக கோப்பையில் விளையாடி வருவதாக நியூசிலாந்து அணியின் முன்னணி ஊடகமான ஸ்டப் கடுமையான குற்றச்சாட்டுகளையும், சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. 

மேலும் படிக்க | உலககோப்பை அரையிறுதிப் போட்டி: நீங்கள் கேள்விப்படாத 8 சுவாரஸ்யங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News