ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர் - T20 உலகக்கோப்பையும் கேள்விக்குறி

ஐபிஎல் 2022-ல் இருந்து காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர் முழுமையாக வெளியேறியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2022, 03:34 PM IST
  • ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய தீபக் சாஹர்
  • முதுகு காயத்தால் அவதிப்பட்டிருப்பதாக தகவல்
  • 4 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாதாம்
ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர் - T20 உலகக்கோப்பையும் கேள்விக்குறி title=

ஐபிஎல் 2022-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட தீபக் சாஹர், காயம் காரணமாக மேலும் 4 மாதங்கள் முழுமையாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.  

மேலும் படிக்க | Elite Runs: பத்தாயிரம் ரன்களை தாண்டி விராட் கோலியின் உயரத்தைத் தொட்ட ரோஹித் ஷர்மா

தீபக் சாஹர் காயம்

கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு  இடையிலான கடைசி 20 ஓவர் போட்டியில் தீபக் சாஹர் காயமடைந்தார். இதனால், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர், சிகிச்சை மற்றும் முறையான பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக முதுகிலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், குறைந்தது அவர் 4 மாதங்கள் அவர் கிரிக்கெட் விளையாட முடியாது. 

சிஎஸ்கே ஏமாற்றம்

ஏற்கனவே ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்த அவர், பந்துவீசத் தொடங்கினார். அப்போது திடீரென முதுகில் தீபக் சாஹருக்கு ஏற்பட்ட காயம், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை 4 மாதங்களுக்கு முடக்கியது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக 14 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார். தோனியைவிட அதிக தொகைக்கு ஏலம் எடுத்த சென்னை அணி, அவர் களத்துக்கு திரும்புவார் என ஆர்வமாக காத்திருந்தது. இப்போது கிடைத்திருக்கும் தகவல் அந்த அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபக் சாஹர் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டி 

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் அவர் இப்போதைக்கு பங்கேற்பது மிகவும் கடினம். சென்னை அணி ஏற்கனவே ஏமாற்றத்தில் இருக்கும் நிலையில், தீபக் சாஹரின் காயம் இந்திய அணிக்கும் பின்னடைவாக அமைந்துள்ளது.  

மேலும் படிக்க | ரூ.8.5 கோடிக்கு வாங்கிய பிளேயரை வெளியே உட்கார வைப்பதா? மும்பையை விளாசும் முன்னாள் வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News