நிச்சயம் இவர்தான் இந்திய அணியின் எதிர்காலம்! கவாஸ்கர் கூறிய வீரர்!

இலங்கையை இந்தியா ஒயிட்வாஷ் செய்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்டின் 'next Big Thing' என்று ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை சுனில் கவாஸ்கர் பெயரிட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 21, 2022, 12:35 PM IST
  • சமீபத்தில் இலங்கையை வாஸ் அவுட் செய்தது இந்தியா.
  • மூன்று டி20 போட்டியிலும் அவுட் ஆகாமல் இருந்தார் ஷ்ரேயாஸ்.
  • ஐபிஎல்-ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிச்சயம் இவர்தான் இந்திய அணியின் எதிர்காலம்! கவாஸ்கர் கூறிய வீரர்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், சமீபத்தில் முடிவடைந்த இலங்கையின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, ​​தனது சிறந்த பேட்டிங் திறமையால் அனைவரையும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். டி20யில் 3-0 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா. முழு இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவிற்கு மிகப்பெரிய சாதகமாக இருந்தது ஷ்ரேயாஸ் ஐயர், டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார், அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 67 ரன்கள் எடுத்தார். 

மேலும் படிக்க | ப்பா.. என்ன கேட்ச்! அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய இந்திய வீராங்கனை!

இதற்கிடையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ஸ்ரேயாஸ்தானா என்று கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  இந்த கேள்விக்கு பதிலளித்த கவாஸ்கர், “ஆம், நிச்சயமாக, அவர் அப்படித்தான் விளையாடுகிறார். ஏனென்றால், அவர் விளையாடிய விதத்தில் யாரும் தற்போது இல்லை. 
எந்த வீரரும் இவ்வளவு கச்சிதமாக ஷாட்களை அடிப்பது இல்லை.  எனவே அடுத்த ஆறு - எட்டு மாதங்களில் அவர் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய விஷயமாக இருக்க முடியும் என்பதை இவை அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன" என்று கூறினார்.

2வது டெஸ்டில் ஆட்ட நாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். ஐயர் முதல் இன்னிங்சில் 92 ரன்கள் எடுத்ததால், இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களை எட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் எடுத்த 67 ரன்கள், 477 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயம் செய்ய உதவியது. இதன் மூலம் பிங்க்-பால் டெஸ்ட் போட்டியில் இரண்டு அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார் ஸ்ரேயாஸ், அதே நேரத்தில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

shreyasiyer

மேலும், ஐபிஎல் போட்டி குறித்து பேசிய கவாஸ்கர், பஞ்சாப் அணி மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது கூறினார்.  பஞ்சாப் கிங்ஸ் 15 சீசன்களில் 2008 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை மட்டுமே பிளே ஆஃப்களை எட்டியுள்ளது மற்றும் ஏழாவது சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2014 முதல், பஞ்சாப் இரண்டு முறை அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்தது.  இந்த போல ஒரு கட்டத்தில், தற்போது மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப்.  இந்த ஆண்டு பஞ்சாபிற்கு சாதாரண ஆண்டாக இருக்கப்போவது இல்லை.  மிக பெரும் சவால்களை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

மேலும் படிக்க | ரெய்னாவுக்குத் திடீர் விருது: ஏன் தெரியுமா?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News