பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் முத்திரை பதித்த சுரேஷ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சை ரசிப்பதற்காகக் கூட்டம் கூடிக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கை ரசித்துப் பார்ப்பதற்கென தனிக் கூட்டத்தை உருவாக்கியவர்களுள் மிக முக்கியமானவர் என ரெய்னாவைச் சொல்லலாம். துல்லியமான த்ரோ வாயிலாக எதிரணியினரை ரன் அவுட் செய்வதாகட்டும், பல மீட்டர் தாவிச் சென்று கேட்ச் பிடிப்பதாகட்டும் ரெய்னாவின் ஸ்டைலே தனிதான்.
ரெய்னாவின் கைக்கு பந்து சென்றாலே, ரன் ஓட யோசிக்கும் அளவுக்கு எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர். ஃபீல்டிங்கில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸுக்கு நிகராக கிரிக்கெட் வல்லுநர்களால் புகழப்படும் ரெய்னா, ஒருநாள் போட்டிகளில் மட்டும் 102 கேட்சுகள் பிடித்துள்ளார். ஐபிஎல்லில் அதிக கேட்சுகள் (107) பிடித்த ஃபீல்டராகவும் சுரேஷ் ரெய்னாவே உள்ளார். இவை தவிர ஐபில்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நட்சத்திரமாக விளங்கிய அவர், முன்பொரு காலத்தில், ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த ஐபிஎல் வீரர் எனும் பெருமையையும்கூட பெற்றிருந்தார். ஐ.பி.எல்.ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
மேலும் படிக்க | ஐ.பி.எல்லுக்கு வரும் புது விதி: வரமா, சாபமா?!
இடது கை பேட்ஸ்மேனான ரெய்னா 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,615 ரன்கள் குவித்துள்ளார். 5 முறை சதம் விளாசியுள்ள ரெய்னா 36 அரை சதங்களையும் அடித்துள்ளார். ஐபிஎல்லில் 205 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள அவர் 39 அரை சதங்களுடன் 5528 ரன்களும் அடித்துள்ளார். சமீப காலமாக ஃபார்ம் அவுட்டில் ரெய்னா தவித்துவந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்லில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. சென்னை அணியும் கூட அவரைப் புறக்கணித்தது. ஐபிஎல்லின் கிங் ஆக இருந்து குஜராத் அணிக்கு கேப்டனாகவும் இருந்து புகழ்பெற்ற ரெய்னா ஐபிஎல்லில் இருந்தே ஓரங்கட்டப்பட்டது அவரது ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது- மாலத் தீவு அரசு ரெய்னாவுக்கு விருது வழங்கியுள்ள செய்தி. ஆம், நடப்பாண்டிற்கான மாலத்தீவுகள் ஸ்போர்ட்ஸ் அவார்ட்ஸ் பிரிவின் கீழ், ‘ஸ்போர்ட்ஸ் ஐகான்’ விருது சுரேஷ் ரெய்னாவுக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் ரெய்னாவுக்குக் கிடைத்திருக்கும் இந்த விருதை அவரது ரசிகர்கள் பலர் கொண்டாடிவருகின்றனர்.
மேலும் படிக்க | என்னுடைய வாழ்க்கை வரலாற்rறில் அவர்தான் நடிக்க வேண்டும்- சுரேஷ் ரெய்னா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR