இனி இந்திய வீரர்களுக்கு இது ரொம்ப முக்கியம் - பிசிசிஐ புதிய திட்டம்

DEXA Scan : இந்திய வீரர்கள் இனி ஸ்குவாடில் இடம்பிடிக்க புதிய நடைமுறைகளில் தேர்ச்சி பெற வேண்டும் என பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 2, 2023, 09:53 AM IST
  • பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
  • டி20 உலகக்கோப்பை, ஆசியக் கோப்பை தோல்வி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இனி இந்திய வீரர்களுக்கு இது ரொம்ப முக்கியம் - பிசிசிஐ புதிய திட்டம் title=

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லஷ்மண், முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மா ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் 2022ஆம் ஆண்டு இந்திய ஆடவர் அணியின் செயல்பாடுகள் குறித்தும், இந்தாண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு சில முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்க்கவும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்காக, உலகக்கோப்பையில் விளையாடத்தக்க 20 வீரர்களின் பெயர் பட்டியலை தயாரித்துள்ள பிசிசிஐ, இந்த வீரர்களின் உடற்தகுதியில் கூடுதல் கவனம் முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், தேசிய கிரிக்கெட் அகாதமி உறுப்பினர்கள், 10 ஐபிஎல் அணிகளுடன் தொடர்பில் இருந்து குறிப்பிட்ட வீரர்களின் உடற்தகுதியை தொடர்ந்து, கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் படிக்க | ரோஹித், விராட், சூர்யா ஐபிஎல் 2023ல் விளையாடுவது சந்தேகம்! பிசிசிஐ-ன் புது ரூட்!

மேலும், வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறவும், தேர்வுக்குழு பரிசீலனைக்கு வரவும் Yo-Yo சோதனை மற்றும் DEXA ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றில் தேர்ச்சியடைய வேண்டும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது என கூறப்படுகிறது. 

Yo-Yo சோதனை 

Yo-Yo சோதனை என்பது உடற்பயிற்சி சார்ந்த சோதனை ஆகும், இதில் 20 மீட்டர் இடைவெளியில் உள்ள குறிப்பான்களுக்கு இடையே அதிக வேகத்தில் ஓடுவது ஆகியவை அடங்கும். விராட் கோலி இந்திய கேப்டனாக இருந்த காலத்தில் இந்த சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் தேர்ச்சி மதிப்பெண் 16.1 ஆக இருந்தது, பின்னர் அது 16.5 ஆக அதிகரிக்கப்பட்டது.

தீபக் சாஹர் போன்றவர்கள் தொடர்ந்து காயத்தில் சிக்கி வருவதாலும், இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதி மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் உள்ளார். 

இந்நிலையில், Yo-Yo சோதனை மட்டுமின்றி, வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க மற்றொரு தகுதியாக DEXA ஸ்கேனில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த முடிவு வரும் 50 உலகக்கோப்பையை அடிப்படையாக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். 

DEXA ஸ்கேன்

DEXA என்பது Dual-Energy X-ray Absorptiometry என்பதன் சுருக்கம். இது ஒரு வகை ஸ்கேன் ஆகும், இதில் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தின் உதவியால் எலும்பின் வலிமையை அளவிட முடியும். எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பே அதன் சாத்தியத்தை தீர்மானிக்கவும் இது உதவுகிறது.

இது எலும்பு அடர்த்தி சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. DEXA என்பது ஒரு வகையான சிறப்பு எக்ஸ்ரே ஆகும். இது இரண்டு வகையான கற்றைகளை உருவாக்குகிறது - அதிக ஆற்றல் மற்றும் குறைந்த ஆற்றல். இந்த இரண்டு கற்றைகளையும் எலும்பு வழியாகச் செலுத்தி, வெளிப்படும் எக்ஸ்-கதிர்களின் எண்ணிக்கையின் அடர்த்தி கண்டறியப்படுகிறது. DEXA ஸ்கேன்களில் எலும்பு தடிமன் ஒரு முக்கிய காரணியாகும்.

எனவே இந்திய அணியில் இனி இடம் வேண்டும் என்றால், ட்விட்டர், பேஸ்புக் போன்ற இடங்களில் பதிவிடாமல், சோதனைகளில் தேர்ச்சியடைவதும் முக்கியமான ஒன்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 2022இல் இந்தியாவின் மானத்தை காப்பாற்றிய வீரர்கள் யார் யார்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News