பிசிசிஐ ஒப்பந்ததில் கைக்கழுவப்படும் சீனியர்கள்... ப்ரமோஷன் பெறும் இளம் வீரர்கள் - முழு பட்டியல்!

BCCI Central Contract : இந்திய வீரர்களின் பிசிசிஐ ஒப்பந்ததில் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும், அதில் பல சீனியர் வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 12, 2022, 06:14 PM IST
  • ஹர்திக் பாண்டியாவுக்கு சூர்யகுமார், சுப்மன் கில்லு ஆகியோர் ப்ரமோஷன் என தகவல்.
  • ஹர்திக் பாண்டியா கடந்தாண்டு ஒப்பந்தத்தில் பின்னடைவு.
பிசிசிஐ ஒப்பந்ததில் கைக்கழுவப்படும் சீனியர்கள்... ப்ரமோஷன் பெறும் இளம் வீரர்கள் - முழு பட்டியல்! title=

BCCI Central Contract : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் வரும் டிச. 21ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில், இந்திய வீரர்களின் ஆண்டு ஒப்பந்தம் குறித்தும் முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தங்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, கடந்தாண்டு ஒப்பந்ததில் இருந்த வீரர்களில் சிலர் இம்முறை விடுவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

வழக்கமாக, பிசிசிஐயின் பட்டியலில் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு தலா 7 கோடி ரூபாய் வழங்கப்படும். இதேபோன்று, ஏ பிரிவுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவுக்கு 3 கோடி ரூபாயும், சி பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இடம்பெற்ற இந்திய அணியின் முன்னாள் துணை கேப்டன் அஜிங்கயா ரகானே, வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, விக்கெட் கீப்பர் சாஹா ஆகியோர் பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | IPL 2023 : மினி ஏலத்தின் விதிகள் முதல் அணிகளின் கையிருப்பு தொகை வரை - முழு விவரம்

மேலும், அதிரடி பேட்டர் சூர்யகுமார் யாதவ், ஓப்பனிங் பேட்டர் சுப்மன் கில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒப்பந்த படிநிலையில் முன்னேற்றம் காண உள்ளனர். 

அதில், ஹர்திக் பாண்டியா தற்போது சி பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், அடுத்து அவர் பி பிரிவுக்கு முன்னேற உள்ளார் என கூறப்படுகிறது. வரும் 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்த உள்ளார் என கூறப்படும் நிலையில், அவருக்கு இந்த ப்ரோமாஷன் கொடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. கடந்தாண்டு காயத்தால், அவர் பி பிரிவில் இருந்து சி பிரிவுக்கு பின்தங்கியது நினைவுக்கூரத்தக்கது. 

இதேபோல், தற்போது டி20 அரங்கில் நம்பர் 1 வீரராக உள்ள சூர்யகுமார் யாதவ், சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு முன்னேற உள்ளார் என கூறப்படுகிறது. வருங்காலத்தில் அவர் மற்ற இரு ஃபார்மட்களிலும் முக்கிய வீரராக உருவெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத பேட்டராக உருவெடுத்துள்ள சுப்மன் கில்லும் சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அன்று, வங்கதேச அணிக்கு எதிராக 210 ரன்களை குவித்த இஷான் கிஷன் புதிதாக ஒப்பந்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.  

வீரர்கள் பட்டியல் பிசிசிஐ ஒப்பந்ததின் அடிப்படையில்:

A+ பிரிவு - ரூ. 7 கோடி

விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரோஹித் சர்மா.

ஏ பிரிவு - ரூ. 5 கோடி

ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், கேஎல் ராகுல், முகமது ஷமி.

பி கிரேடு - ரூ 3 கோடி

சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ்.

சி கிரேடு - ரூ 1 கோடி

ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, யுஸ்வேந்திர சாஹல், சூர்யகுமார் யாதவ் மற்றும் மயங்க் அகர்வால்.

மேலும் படிக்க | கேப்டன் பதவி வந்த பிறகு ரோகித் சர்மாவை தொடரும் சோதனை! எப்போது முடிவுக்கு வரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News