ஐபிஎல் அணிகளில் அதிகம் மதிப்பு வாய்ந்த அணி இதுதான்... ஆனால் சிஎஸ்கே இல்லை!

Brand Value Of IPL Teams: ஐபிஎல் தொடரில் அதிக மதிப்பு வாய்ந்த அணிகள் எவ்வளவு, ஒவ்வொரு அணியின் மதிப்பையும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 14, 2023, 04:10 PM IST
  • ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி நடக்கிறது.
  • பஞ்சாப் அணி குறைவான மதிப்பை பெற்றுள்ளது.
  • ஐபிஎல் தொடரின் மதிப்பும் அதிகரித்துள்ளது.
ஐபிஎல் அணிகளில் அதிகம் மதிப்பு வாய்ந்த அணி இதுதான்... ஆனால் சிஎஸ்கே இல்லை! title=

Brand Value Of IPL Teams: 17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் செவ்வாய்கிழமை (டிச. 19) அன்று துபாயில் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு கோடை காலத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில், மொத்தம் 77 வீரர்களை தேர்வு செய்ய இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் ஏலம்விடப்பட உள்ளனர். இதில் 214 பேர் இந்திய வீரர்கள், மேலும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகளில் இருந்து 2 பேர் உள்பட மொத்தம் 119 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். டிச.19ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு இந்த ஏலம் தொடங்குகிறது. 

ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுக்க தயார் ஆகி வருகின்றனர். குஜராத் அணி ஏலத்தில் அதிக தொகையுடன் வரும் அணியாக உள்ளது. லக்னோ அணி குறைந்த தொகையுடன் ஏலத்தை எதிர்கொள்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க எப்போதும் ஐபிஎல் தொடர் என்றாலே அது சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு மீதுதான் பெரும் எதிர்பார்ப்பும், கவனமும் இருக்கும். ஐபிஎல் வரலாற்றிலேயே பெரிய வெற்றி சதவீதங்களை வைத்துள்ள அணிகளாக இரு அணிகளும் உள்ளன. 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறையும், ஹைதராபாத் (டெக்கான் சார்ஜர்ஸ் - 2009, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 2016) 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை கைபற்றி உள்ளன.

மேலும் படிக்க | இந்த இரண்டு வீரர்களின் என்ட்ரி... வெற்றி பார்முலாவை கண்டுபிடிக்குமா இந்திய அணி?

இதில் சென்னையும், மும்பையும் செலுத்திய உள்ள ஆதிக்கத்தை கண்கூடாக பார்க்க முடியும். 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர்தான் கோப்பையை வென்றது, இதில் நடுவே இரண்டு ஆண்டுகள் தடை வேறு. மும்பை அணி கடைசியாக 2020ஆம் ஆண்டில் கோப்பை வென்ற நிலையில், கடந்த மூன்று சீசன்களாக கோப்பையை நழுவவிட்டனர். 

இப்படி கோப்பைகளை வென்றதன் மூலம் சென்னை, மும்பை அணிகளின் நிகர மதிப்பும் அதிகம்தான். அந்த வகையில், தற்போது வெளியாகி உள்ள தகவல்களின் படி எந்த அணியின் நிகர மதிப்பு அதிகமாக உள்ளது என்பதை காணலாம்.

அணிகளும் அதன் நிகர மதிப்புகளும்...

மும்பை இந்தியன்ஸ் - ரூ. 725 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 672 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 655 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 582 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - ரூ. 545 கோடி
டெல்லி கேபிடல்ஸ் - ரூ. 537 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 521 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 401 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ. 391 கோடி
பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 377 கோடி

ஐபிஎல் தொடரின் மதிப்பு என்ன தெரியுமா?

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்களில் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆகும். ஐபிஎல் தொடரின் சொத்து மதிப்பு 2022இல் 8.4 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்தது. அது 2023இல் 10.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 28% அதிகரித்துள்ளது. ஐபிஎல் அமைப்பின் மொத்த பிராண்ட் மதிப்பு 433% அதிகரித்துள்ளது.  இந்த தகவல் பிராண்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவுக்கு ஆடப்போகும் அடுத்த தமிழக வீரர் இவர் தான் - அஸ்வின் கணிச்சா மிஸ் ஆகாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News