பட்டுனு மோதி சட்டுனு எரிந்த பென்ஸ் கார்... ரிஷப் பண்ட் காரின் முழு விவரம்!

Rishabh Pant Car : விபத்துக்குள்ளான ரிஷப் பண்டின் கார் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 30, 2022, 01:33 PM IST
  • தூக்கத்தால் விபத்து ஏற்பட்டதாக போலீசாரிடம் பண்ட் தெரிவித்துள்ளார்.
  • காரை எரியத்தொடங்கியதை அடுத்து கண்ணாடியை உடைத்து வெளியே தப்பியுள்ளார்.
  • தற்போது டேராடூனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டுனு மோதி சட்டுனு எரிந்த பென்ஸ் கார்... ரிஷப் பண்ட் காரின் முழு விவரம்! title=

உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த ரிஷப் பண்டின் கார் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விபத்தில் அவருக்கு தலை, முழங்கால் மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காலில் எலும்பு முறிவு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ஹரிதுவார் மாவட்டத்தின் ரூர்க்கி மருத்துவமனையில் இருந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காரை ரிஷப் பண்ட் தான் ஓட்டிச்சென்றுள்ளார். மேலும், காரில் வேறு யாரும் அவருடன் பயணிக்கவில்லை. கார் விபத்துக்குள்ளான உடன் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததை அடுத்து, கார் கண்ணாடியை உடைத்து வெளியே தப்பித்துள்ளார். அதன்பின்னரே கார் முழுவதுமாக எரிந்துள்ளது.

மேலும் படிக்க | Rishabh Pant Accident CCTV Video : தூக்கத்தில் ஓட்டிய ரிஷப் பண்ட்... தூக்கி வீசப்பட்ட கார்

தற்போது, அவர் ஓட்டிச்சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் கார் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த் Mercedes-AMG GLE 43 4MATIC கூபே காரை ஓட்டி சென்றார். இந்த கார் இந்தியாவில் 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் வரை, ஒரு கோடிக்கும் குறைவாக விற்கப்பட்டது. பின்னர் இந்த காரின் புதிய மாடல் சந்தைக்கு வந்துவிட்டது. 

இந்த SUV-கூபே ஹைப்ரிட் மூன்று லிட்டர் V6 பை-டர்போ எஞ்சின் கொண்டது. இது 9 Speed Auto Gearbox உடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின் 362 BHP மற்றும் 520 Nm உச்ச Torque உடன் செயலாற்றும்.

இந்த கார் 0-100 கி.மீ., வேகத்தை 5.7 விநாடிகளில் எட்டிவிடும். இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (CBU) இந்தியாவில் விற்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது, இது இங்கு உருவாக்கப்படவும் இல்லை, அசெம்பிள் செய்யப்படவும் இல்லை.

பெரும்பாலான மெர்சிடிஸ் கார்களை போலவே, AMG GLE 43 4MATIC கூபேயிலும் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் ஏழு ஏர்பேக்குகள், இழுவைக் கட்டுப்பாடு (Traction Control), ஆல்-வீல் டிரைவ் போன்ற அம்சங்கள் உள்ளன.

மேலும் படிக்க | விரைவில் இந்திய அணிக்கு டாட்டா காட்டும் டிராவிட்... அடுத்தது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News