ரெக்கார்டுக்காக விளையாடாதீங்க கோலி; மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் முன்னாள் வீரர்

20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், விராட் கோலி ரெக்கார்டுக்காக விளையாடக்கூடாது என கவுதம் காம்பீர் விளாசியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 18, 2022, 10:44 AM IST
  • விராட் கோலி மீது கடும் விமர்சனம்
  • ரெக்கார்டுக்காக விளையாடாதீர்கள்
  • கவுதம் காம்பீர் சொன்ன ஆலோசனை
ரெக்கார்டுக்காக விளையாடாதீங்க கோலி; மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் முன்னாள் வீரர் title=

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை மீதுதான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு இருகிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் படிக்க | கடந்த ஒரு வருடமாக காயம் அடையாத இந்திய வீரர் யார் தெரியுமா?

இந்த உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்றால், விராட் கோலி தன்னுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடக்கூடாது என தெரிவித்துள்ளார். உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தனிநபர் சாதனைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை, அணி வெற்றி மட்டுமே பிரதானமானது என கூறியிருக்கும் அவர், இதனை மனதில் வைத்து விராட் கோலி விளையாட வேண்டும் என சீண்டியிருக்கிறார். அப்படி விளையாடினால் அது அவருக்கும் நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.

கவுதம் காம்பீரின் இந்த கருத்து விராட் கோலியின் ரசிகர்களை கடுமையாக கோபமடைய செய்துள்ளது. விராட் கோலி எப்போதும் அணிக்காக விளையாடுவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பவர், அவரை வேண்டும் என்றே சிறுமைபடுத்தும் விதமாக காம்பீர் பேசி வருகிறார் என சாடியுள்ளனர். கோலி மீது இருக்கும் காழ்புணர்ச்சியின் காரணமாக கவுதம் காம்பீர் தொடர்ந்து பிதற்றி வருகிறார் என விளாசியிருக்கும் விராட் கோலி ரசிகர்கள், அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கூட 50 ரன்கள் அடிக்கும் வாய்ப்பு இருந்தும்கூட அதனை பெருதன்மையாக விட்டுக்கொடுத்து தினேஷ் கார்த்திக்கை விளையாடுமாறு விராட் கோலி அறிவுறுத்தினார் என்பதை எடுத்துக்காட்டி காம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளனர். 

விராட் கோலிக்கும், காம்பீருக்கும் எப்போதுமே பொருத்திப்போவதில்லை. கோலி அணிக்கு வந்த புதியதில் காம்பீர் ஆதரவு கொடுத்த நிலையில், அதன்பின் நிலைமை மாறியது. ஐபிஎல் போட்டியின்போது இருவரும் மைதானத்திலேயே கடுமையாக மோதிக் கொள்ளும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் காம்பீர், விராட் கோலியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

மேலும் படிக்க | T20 World cup: ஒரே ஓவரில் மேட்சை மாற்றிய ஷமி; விராட் கோலியின் அபார கேட்ச் - இந்தியா வெற்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News