ஐபிஎல்லில் டிவில்லியர்ஸ் பெரிய பிளேயர் கிடையாது: காம்பீர்

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை டிவில்லியர்ஸ் பெரிய பிளேயர் எல்லாம் கிடையாது. அவர் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமே வைத்திருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2023, 05:53 PM IST
ஐபிஎல்லில் டிவில்லியர்ஸ் பெரிய பிளேயர் கிடையாது: காம்பீர்  title=

ஐபிஎல் 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டனர். இந்நிலையில், கவுதம் காம்பீர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசும்போது ஏபி டிவில்லியர்ஸ் குறித்து தெரிவித்திருக்கும் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: பழைய பன்னீர்செல்வமாக வந்த தோனி... சிக்ஸரில் சொக்கி நிற்கும் ரசிகர்கள்!

அந்த பேட்டியில் பேசிய கவுதம் காம்பீர், ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை டிவில்லியர்ஸ் பெரிய பிளேயர் எல்லாம் கிடையாது. சின்னசாமி ஸ்டேடியம் போன்ற சின்ன மைதானங்களில் மட்டுமே அவர் எல்லா பக்கமும் சுழன்று அடிப்பார். அங்கு அவருக்கு ஸ்டைக்ரேட்டும் அதிகம் இருக்கும். ஆனால், சுரேஷ் ரெய்னா 4 ஐபிஎல் டைட்டில்களை வென்றிருக்கிறார். டிவில்லியர்ஸ் தனிப்பட்ட சாதனைகளை மட்டுமே வைத்திருக்கிறார். டைட்டில் தான் முக்கியம். தனிபட்ட பிளேயர்களின் ரெக்கார்டு எல்லாம் பிரயோஜமில்லை என விளாசியிருக்கிறார்.

அவரின் இந்தக் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காம்பீரை பொறுத்தவரை தனக்கு தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துவிடுவார். இதனால் பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அவர், ஐபிஎல் 2023 தொடருக்கு முன்பாகவே நெட்டிசன்களின் விளாசலுக்கும் உள்ளாகியிருக்கிறார்.

ஏபி டிவில்லியர்ஸை பற்றி பேசும் காம்பீர் சின்னசாமி மைதானத்தில் அதிரடியாக ஆடியிருக்க வேண்டியது தானே, ஆனால் அந்த மைதானத்தில் 11 இன்னிங்ஸ் விளையாடி வெறும் 30 ரன்கள் சராசரி மட்டுமே வைத்திருக்கிறார். ஸ்டைக்ரேட் வெறும் 126 தான் இருக்கிறது. அந்த மைதானத்தில் 166 ஸ்டைக்ரேட் வைத்திருக்கும் டிவில்லியர்ஸை இவர் விமர்சிக்கலாமா? என பதிலடி கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிர்வாக அதிகாரியாக காம்பீர் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக உள்ளார். 

மேலும் படிக்க | WPL 2023: கியாரா அத்வானி - கீர்த்தி சனான் நடனத்தில் பிரம்மாண்டமாக தொடங்கிய மகளிர் ஐபிஎல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News