எம்எஸ் தோனியை என்றும் மறக்க முடியாத 5 தருணங்கள்!

எம்எஸ் தோனி இன்று தனது 41 பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அவர் தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவரது மறக்க முடியாத கிரிக்கெட் தருணங்களை இங்கே பார்ப்போம்.  

Written by - RK Spark | Last Updated : Jul 7, 2022, 06:57 AM IST
  • தோனி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
  • இந்திய அணிக்காக பல்வேறு கோப்பைகளை வேற்று தந்துள்ளார்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 கோப்பைகளை வெற்றி பெற்றுள்ளார்.
எம்எஸ் தோனியை என்றும் மறக்க முடியாத 5 தருணங்கள்!  title=

எம்.எஸ். தோனி இந்திய மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரர் ஆவார்.  அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை பெற்று தந்தார்.  அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் நம்பமுடியாத மற்றும் மறக்க முடியாத ஐந்து தருணங்களை இங்கே பார்க்கலாம்:

மேலும் படிக்க | ஷிகர் தவான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி

2007 டி20 உலகக் கோப்பை வெற்றி

2007 T20WCக்கு இந்தியா அதிக எதிர்பார்ப்புகளுடன் செல்லவில்லை. அணியின் பல மூத்த வீரர்கள் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.  ஒரு இளம் இந்திய அணியின் படை தோனியின் தலைமையில் விளையாடியது.  இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போட்டியை வென்றது. போட்டியின் கடைசி ஓவர் உட்பட இந்த தொடர் முழுவதும் தோனி தனது அமைதியையும் தந்திரத்தையும் வெளிப்படுத்தினர்.  கடைசி ஓவரில் யாரும் எதிர்பார்க்காத வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் ஷர்மா மீது நம்பிக்கை காட்டினார். 1983 க்குப் பிறகு இந்தியா தனது முதல் உலகக் கோப்பை பட்டத்தை இதன் மூலம் வென்றது.

2007

டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக உலகின் நம்பர் ஒன்

2003 ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தரவரிசையில் 2009 ஆம் ஆண்டில் முதலிடத்தை பிடித்தது இந்தியா. கேப்டன் கூல் தோனி இரண்டு சதங்கள் அடித்த இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதைத் தொடர்ந்து, இந்தியா நம்பர் ஒன் அணியானது. 

2011 உலகக் கோப்பை வெற்றி

2011ம் ஆண்டுக்கு முன்பு வரை உலகக்கோப்பை போட்டிகளை நடத்திய எந்த அணியின் இதுவரை கோப்பையை வென்றது இல்லை.  தோனியின் கீழ், 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி வரலாறு படைத்தது. இறுதிப் போட்டியில், 274 ரன்களைத் துரத்திய தோனி, இந்தியா 114/3 என்ற நிலையில், ஃபார்மில் உள்ள யுவராஜ் சிங்குக்கு முன்னால் களமிறங்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.  ஒரு சிக்சர் உடன் போட்டியை வென்ற தருணத்தை எந்த ஒரு தோனியின் ரசிகரும் மறக்க முடியாது.  

2011

இரட்டை செஞ்சுரி vs ஆஸ்திரேலியா, 2013

2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சொந்த டெஸ்டில் தோனி பேட்டிங்கிற்கு வந்தபோது இந்தியா 200 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருந்தது. அதைத் தொடர்ந்து நடந்தது ஒரு மாயாஜால இன்னிங்ஸ். தோனி, விராட் கோலியுடன் இணைந்து 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து, இரட்டை சதம் அடித்தார். தோனி 266 பந்துகளில் 224 ரன்களை எடுத்தார், இதன் மூலம் இந்தியா கணிசமான இடத்தைப் பெற்று இறுதியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்தியா 4-0 என ஆஸி.யை ஒயிட்வாஷ் செய்தது.

2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி

2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டி இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்த கடைசி ஐசிசி தொடர் ஆகும்.  ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மாவின் புதிய தொடக்க பார்ட்னர்ஷிப்பின் பின்னால், இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றது. இந்த தொடரை நடத்திய இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கோப்பையை வென்றது.  

2013

மேலும் படிக்க | கிராமத்துக்கு விசிட் அடித்த தோனி - சிறுமிகளுக்கு கொடுத்த சர்பிரைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News