IND vs NZ: பார்மில் கில்... பாவம் பிருத்வி ஷா - ஹர்திக் பாண்டியா கூறுவது என்ன?

India vs New Zealand: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், யார் ஓப்பனராக களமிறங்க போகிறார்கள் என்பது குறித்து ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 26, 2023, 10:00 PM IST
  • ஹர்திக் பாண்டியா டி20 அணியை தலைமை தாங்குகிறார்.
  • ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.
  • நாளை முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது.
IND vs NZ: பார்மில் கில்... பாவம் பிருத்வி ஷா - ஹர்திக் பாண்டியா கூறுவது என்ன? title=

India vs New Zealand: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை (ஜன. 27) ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ரோஹித் தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய அதே உத்வேகத்துடன், ஹர்திக் தலைமையிலான டி20 அணியும் உள்ளது. 

கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை படுதோல்வியை அடுத்து, பலமிக்க அணியை கட்டமிக்க பிசிசிஐ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அதில் முதற்கட்டமாக, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர்களை டி20 போட்டிகளில் இருந்து கழட்டிவிட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து, பெஞ்சையும் வலுவாக்க பயிற்சியாளர் ராகுலும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

டி20யில் சூர்யகுமாரின் அசூரத்தனமான பார்ம், ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லின் தொடர்ச்சியான பார்ம், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரின் எழுச்சி இந்திய அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இருப்பினும், பிளேயிங் லெவனில் பொருத்தமான வீரரை சேர்ப்பது இந்திய அணிக்கு மிகவும் கடினமானதாகவே இருக்கும். 

மேலும் படிக்க | இந்திய அணியுடன் தோனி... சொந்த ஊரில் சர்ப்ரைஸ் கொடுத்த 'தல'

கில்லி 'கில்'

அந்த வகையில், நாளைய போட்டியின் பிளேயிங் லெவனும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஓப்பனராக யாரை களமிறக்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்திய அணிக்கு நீண்ட நாள்கள் கழித்து பிரித்வி ஷா வந்துள்ளார். இந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரின் இடத்தை சுப்மான் கில் பறித்துவிட்டதாகவே தெரிகிறது. நாளைய போட்டியில் சுப்மன் கில் தான் விளையாடிவார் என இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்று தெரிவித்தார். ஒருநாள் போட்டிகளில் கில்லின் பார்மை கருத்தில் கொண்டு, ஹர்திக் அவரது தேர்வு ஒரு இன்றியமையாதது என்று கூறினார். கில் தனது கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு இரட்டை சதம் உட்பட மூன்று சதங்களை அடித்துள்ளார். இஷான் கிஷான், கில் உடன் இணைந்து ஓபன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்வி ஷா முதல் டி20 போட்டியில் விளையாடுவாரா என்று கேட்டபோது, ஹர்திக் கூறினார். "இல்லை சார். சுப்மான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார், அவர்தான் விளையாடுவார். அவர் பேட்டிங் செய்யும் விதமும், ஏற்கனவே அணியில் இருந்த விதமும் இதில் முதன்மையாகிறது" என்று ஹர்திக் முதல் டி20க்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஜித்தேஷ் சர்மா விளையாடுவாரா?

புதிய பந்தில் பந்துவீசுவதை எப்போதும் நான் ரசிப்பேன். பல ஆண்டுகளாக நான் வலைப்பயிற்சியில் பந்து வீசும் போதெல்லாம், நான் புதிய பந்தைத் தேர்வு செய்வேன். நான் பழைய பந்தில் பழகிவிட்டேன், அதனால் பழைய பந்தைக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது போட்டி சூழ்நிலைகளில் உதவியது.

கடந்த ஆட்டத்தில் எங்களது இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்கள் ஓய்வில் இருந்ததால், நான் தயாராக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அது ஒருபோதும் அழுத்தமாக இருந்ததில்லை, நீங்கள் நன்றாகத் தயாரானால் பாதி நேர அழுத்தம் போய்விடும்.

எங்கள் வியூகம் மைதானத்தில் தெரியும். ஜிதேஷ் தனது சிறப்பான ஆட்டத்திற்கான வெகுமதியை பெற்றுள்ளார். துரதிஷ்டவசமாக சஞ்சு சாம்சன் காயம் அடைந்ததால் ஜித்தேஷ்க்கு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் நியூசிலாந்து ஒரு நல்ல அணி. அவர்கள் எப்போதும் உங்களுக்கு சவால் விடுகிறார்கள். அவர்களை தோற்கடிக்க நாங்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்" என்றார். 

மேலும் படிக்க | Republic Day: ராணுவ உடையில் ஜொலித்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News