3 பார்மட்டிலும் கேப்டன் பொறுப்பை துறந்தார் பாபர்... உருக்கமான பதிவு!

Babar Azam Captaincy: மூன்று பார்மட்டிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 15, 2023, 08:40 PM IST
  • பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை.
  • பாபர் கேப்டன்ஸி மீது ஏற்கெனவே பல விமர்சனங்கள் இருந்தன.
  • ரிஸ்வான், ஷகின் அஃப்ரிடி ஆகியோருக்கு கேப்டன் பொறுப்பு வர வாய்ப்புள்ளது.
3 பார்மட்டிலும் கேப்டன் பொறுப்பை துறந்தார் பாபர்... உருக்கமான பதிவு! title=

Babar Azam Captaincy: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் முறையே 5, 6, 7, 8 ஆகிய இடங்களில் நிறைவு செய்தன. 

இருப்பினும், முதல் எட்டு இடங்களில் பிடித்த இந்த அணிகள் மட்டுமே 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. இலங்கை, நெதர்லாந்து அணிகள் 9,10ஆவது இடத்தை பிடித்ததன் மூலம் சாம்பியன் டிராபி தொடருக்கு அந்த அணிகள் தகுதிபெறவில்லை. இருப்பினும், இந்த தொடரை சுவாரஸ்யமாக்கியதில் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் வெற்றியை சொல்லலாம். 

குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து என நான்கு வெற்றிகளை பெற்றது மட்டுமின்றி, மூன்று முன்னாள் சாம்பியன்களை வீழ்த்தி கடைசி வரை அரையிறுதி ரேஸில் இருந்தது. குறிப்பாக, பாகிஸ்தான் அணியை சென்னையில் வீழ்த்தியது அதிக வரவேற்பை பெற்றது. மாறாக பாகிஸ்தான் அணி இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்டகளிடம் தோல்வியை தழுவியது. 

மேலும் படிக்க | இறுதிப்போட்டியில் இந்தியா...? நியூசிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கு - விராட் கோலியின் அசாத்திய சாதனை!

தொடர்ந்து, பாகிஸ்தான் அணி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன, குறிப்பாக கேப்டன் பாபர் அசாம் மீதும் விமர்சனங்கள் இருந்தன. அணித் தேர்வு, பவுலிங் ரோட்டேஷேன், வீரர்களை ஒருங்கிணைப்பது போன்றவற்றில் பாபர் பெரிய அளவில் தோல்வியடைந்ததாக கூறப்பட்டது. அந்நாட்டு மூத்த வீரர்களிடம் இருந்தே பல புகார்களும் வந்தன. 

இந்நிலையில், மூன்று பார்மட்களிலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,"2019ஆம் ஆண்டில் பாகிஸ்தானை வழிநடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து அழைப்பு வந்த தருணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், களத்திற்கு வெளியேயும், களத்திலும் பல உயர்வு தாழ்வையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

ஆனால் பாகிஸ்தானின் பெருமையையும் மரியாதையையும் கிரிக்கெட் உலகில் நிலைநிறுத்துவதை முழு மனதுடன் ஆர்வத்துடன் நோக்கமாகக் கொண்டிருந்தேன். வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டு முயற்சியின் விளைவாக வெள்ளை-பந்து வடிவத்தில் நம்பர் 1 இடத்தை பாகிஸ்தான் எட்டியது, ஆனால் இந்த பயணத்தின் போது அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக ஆர்வமுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு, ஆனால் இந்த முடிவிற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். மூன்று வடிவங்களிலும் ஒரு வீரராக பாகிஸ்தானை நான் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்துவேன். எனது அனுபவம் மற்றும் அர்ப்பணிப்புடன் புதிய கேப்டன் மற்றும் அணிக்கு ஆதரவளிக்க நான் தயாராக உள்ளேன். இந்த குறிப்பிடத்தக்க பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். 

மேலும் படிக்க | 50வது சதமடித்தவுடன் சச்சினுக்கு தலை வணங்கிய விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் பிளையிங் கிஸ்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News