ICC World Cup: அப்டேட் ஆன உலகக்கோப்பை அட்டவணை - இந்தியாவின் புதிய பட்டியல் இதோ!

ICC ODI World Cup 2023: ஐசிசி உலக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடித்து, இலங்கை, நெதர்லாந்து பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து, அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணியின் போட்டி அட்டவணையை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2023, 09:05 AM IST
  • உலகக்கோப்பை தொடர் அக். 5ஆம் தேதி நடைபெறுகிறது.
  • இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.
  • உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவ. 19ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
ICC World Cup: அப்டேட் ஆன உலகக்கோப்பை அட்டவணை - இந்தியாவின் புதிய பட்டியல் இதோ! title=

Indian Team World Cup Updated Schedule: ஐசிசி உலகக்கோப்பை தொடர் வரும் அக். 5ஆம் தேதி முதல் நவ. 19ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஓடிஐ சூப்பர் லீக் தரவரிசையின்படி, அதன் முதல் எட்டு அணிகள் நேரடியாக இத்தொடருக்கு தகுதிபெற்றன. மீதம் உள்ள இரண்டு இடங்களை நிரப்ப இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன்,  நேபாளம், அமெரிக்கா என 10 அணிகளுக்கு இடையே தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. 

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றின் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் முன்னேறின. இதில் கடும் போட்டிக்கு மத்தியில் முதல் அணியாக இலங்கை அணி உலக்கோப்பையின் பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றது. 

மேலும் படிக்க | முதல் முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ்... அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!

இலங்கையும், நெதர்லாந்தும்

அந்த வகையில், நேற்று நடைபெற்ற நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி முக்கியமானதாக அமைந்தது. இதில், நெதர்லாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இரண்டாவது அணியாக உலகக்கோப்பை தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

ஜிம்பாப்வே வெளியேற்றம்

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்த நிலையில், நெதர்லாந்து 42.3 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து அபார வெற்றியை பதிவு செய்தது.  முன்னதாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளுடன் ஸ்காட்லாந்து அணியும் தொடருக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

அப்டேட்டான அட்டவணை

இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு அணி, மற்ற 9 அணிகளுடனும் தலா 1 போட்டியில் விளையாட வேண்டும். இந்த லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, தற்போது இலங்கை, நெதர்லாந்து அணிகள் பிரதான சுற்றுக்கு முன்னேறியுள்ளதை அடுத்து, போட்டி அட்டவணை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. https://zeenews.india.com/tamil/sports/all-10-teams-confirmed-for-the-od...

இந்தியாவின் அட்டவணை

இந்நிலையில், இந்தியாவின் போட்டி அட்டவணை அப்டேட் ஆகியுள்ள நிலையில், அந்த பட்டியலை இங்கே காணலாம். குறிப்பாக, இந்தியா இலங்கையுடன் நவ.2ஆம் தேதி மும்பையில் மோத உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், இலங்கையும் இதே மும்பை வான்கடேவில் மோதியிருந்தது. அப்போது, இந்தியா இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றதால், தற்போதைய இந்த போட்டிக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மற்றொரு அணியான நெதர்லாந்துடன் இந்தியா வரும் நவ. 11ஆம் தேதி பெங்களூருவில் மோதும் எனவும் தெரிகிறது. அப்டேட் செய்யப்பட்ட இந்தியாவின் போட்டி அட்டவணை பின்வருமாறு: 

இந்தியா vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 8 - சென்னை
இந்தியா vs ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11 - டெல்லி
இந்தியா vs பாகிஸ்தான், அக்டோபர் 15 - அகமதாபாத்
இந்தியா vs வங்கதேசம், அக்டோபர் 19 - புனே
இந்தியா vs நியூசிலாந்து, அக்டோபர் 22 - தர்மசாலா
இந்தியா vs இங்கிலாந்து, அக்டோபர் 29 - லக்னோ
இந்தியா vs இலங்கை, நவம்பர் 2 - மும்பை
இந்தியா vs தென்னாப்பிரிக்கா, நவம்பர் 5 - கொல்கத்தா
இந்தியா vs நெதர்லாந்து, நவம்பர் 11, பெங்களூரு 

மேலும் படிக்க | உலக்கோப்பையில் பாகிஸ்தான் கண் வைத்திருக்கும் அந்த பிளேயர் இவர் தான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News