டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நேற்று தொடங்கின. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். குறிப்பாக, இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என 6 பௌலர்கள் உடன் களமிறங்கியது.
இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் முதல் ஓவரில் 1 ரன்னை மட்டும் கொடுத்த நிலையில், அடுத்த ஓவரில் பாபர் அசாமை டக்-அவுட்டில் வெளியேற்றி அர்ஷ்தீப் சிங் மிரட்டலான தொடக்கத்தை அளித்தார். அதேபோல், அவர் வீசிய அடுத்த ஓவரில் முகமது ரிஸ்வான் 4 ரன்களில் வெளியேறினார்.
மேலும் படிக்க | IND vs PAK போட்டியை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?
M. O. O. D!
What a start for #TeamIndia as @arshdeepsinghh strikes early!
Pakistan 1 down as Babar Azam departs.
Follow the match https://t.co/mc9useyHwY #T20WorldCup | #INDvPAK pic.twitter.com/hZ3oyTPgkQ
— BCCI (@BCCI) October 23, 2022
இதன்மூலம், பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களை எடுத்தது. இதன்பின்னர், ஷான் மசூத், இஃப்திகார் அகமது ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர்.
இந்த ஜோடி 76 ரன்களை குவித்தது. குறிப்பாக, அக்சர் படேல் வீசிய 12ஆவது ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு இஃப்திகார் அகமது மிரட்டினார். இருப்பினும், அதற்கடுத்த ஓவரில் ஷமியின் பந்துவீச்சில் இஃப்திகார் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 34 பந்துகளில் 51 ரன்களை குவித்தார்.
இதன்பின்னர், ஹர்திக் பாண்டியா வீசிய 14ஆவது ஓவரில், ஷதாப் கான் 5 ரன்களிலும், ஹைதர் அலி 2 ரன்களிலும் சூர்யகுமார் யாதவிடம் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.
How good was @hardikpandya7 with the ball today.
Finishes with bowling figures of 3/30
Live - https://t.co/mc9usehEuY #INDvPAK #T20WorldCup pic.twitter.com/6pTWGPWBfC
— BCCI (@BCCI) October 23, 2022
அடுத்து, முகமது நவாஸ் 9 ரன்களில் ஹர்திக் பந்துவீச்சிலும், ஆசிப் அலி 2 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சிலும் நடையைக்கட்டினர்.
மறுமுனையில், மசூத் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். அர்ஷ்தீப் வீசிய 19ஆவது ஓவரில் தலா 1 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து ஷாகீன் அஃப்ரிடி அதிரடி காட்டினார்.
இருப்பினும் அவர் கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து 16 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் தரப்பில் ஷான் மசூத் 52 ரன்களுடனும், ஹரீஷ் ராவுஃப் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கேஎல் ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 4 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினர். தற்போது, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி களத்தில் உள்ளனர்.
Innings Break!
Three wickets apiece for @hardikpandya7 & @arshdeepsinghh and a wicket each for @BhuviOfficial & @MdShami11 as Pakistan post a total of 159/8 on the board.
Scorecard - https://t.co/X970NaDN4n #INDvPAK #T20WorldCup pic.twitter.com/Nypo6k5ZRn
— BCCI (@BCCI) October 23, 2022
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ