ICC World Cup 2023: இந்திய அணி அறிவிப்பு... உலகக் கோப்பையில் யார் யாருக்கு வாய்ப்பு?

Indian Team World Cup Squad: ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 5, 2023, 02:34 PM IST
  • அக்டோபர் 5ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது.
  • இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா உடன் மோத உள்ளது.
  • இதில், கே. எல். ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ICC World Cup 2023: இந்திய அணி அறிவிப்பு... உலகக் கோப்பையில் யார் யாருக்கு வாய்ப்பு? title=

Indian Team World Cup Squad: ஒருநாள் போட்டி வடிவிலான 13ஆவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தொடர் கடைசியாக 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்றது. அந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

அந்த வகையில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தொடரை நடத்தும் இந்தியா உள்பட பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. இதுவரை இந்த உலகக் கோப்பை வரலாற்றில், ஆஸ்திரேலியா 5 முறையும், மேற்கு இந்திய தீவுகள், இந்தியா ஆகியவை 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 

இந்திய அணி கடைசியாக 2011ஆம் ஆண்டில் தோனி தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. அதன்பின், 2013ஆம் ஆண்டில் அதே தோனி தலைமையில் இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது. சுமார் 10 ஆண்டுகளாக இந்திய அணியின் ஐசிசி கோப்பை தாகம் நீடித்து வருகிறது. எனவே, 2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் சொந்த மண்ணில் நடப்பதால் இம்முறை கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Asia Cup 2023: செப். 10இல் இந்தியா - பாகிஸ்தான் போட்டி... மீண்டும் மழை வந்தால் என்ன ஆகும்?
 

இந்திய அணி அறிவிப்பு

அந்த வகையில், உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளது. தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களின் இறுதி 15 வீரர்கள் அடங்கிய ஸ்குவாடை உறுதிசெய்ய இன்று கடைசி நாளாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

இந்திய சீனியர் ஆடவர் அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் இன்று மும்பையில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் 15 வீரர்கள் அடங்கிய இந்திய வீரர்களை அறிவித்தார். ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய ஸ்குவாடில் இடம்பெற்ற திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா மற்றும் பேக் அப் வீரராக இருந்த சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கே.எல். ராகுலா, இஷான் கிஷனா...?

காயத்தால் அவதிப்பட்டு வந்த கே.எல். ராகுலுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால், அவர் உடற்தகுதி பெற்றுவிட்டதாக தெரிகிறது. கே.எல். ராகுல் அணிக்கு திரும்பும்பட்சத்தில், இஷான் கிஷனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது குறைவு என கூறப்படுகிறது. இஷான் கிஷன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில், யார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டராக களமிறங்குவார் என அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து கூறிய அவர்,"5ஆவது வீரராக கே.எல். ராகுல் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இருவரிடமும் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்" என பதிலளித்துள்ளார்.

மாற்று வீரர்...

மேலும், அஸ்வின், சஹால் ஆகியோருக்கு திடீரென வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், பிசிசிஐ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இந்த 15 பேர் கொண்ட அணியில் யாருக்கும் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகும்பட்சத்தில் வேறு ஒருவரை பிசிசிஐ மாற்று வீரராக அறிவிக்கும் என்பது நினைவுக்கூரத்தக்கது. 

அதே 8 வீரர்கள்

கடந்த 2011 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார். தற்போது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த தொடரில், அன்று விளையாடிய வீரர்கள் விராட் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்கிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது. மேலும், கடைசியாக நடைபெற்ற 2019 உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி என 8 வீரர்கள் இந்த ஸ்குவாடிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி , முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.

 

மேலும் படிக்க | IND vs NEP: ஒற்றை கையால் கேட்ச் பிடித்து சாதனை படைத்த விராட் கோலி... என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News