இந்தியாவுக்கு மட்டும் பேட்டிங் பிட்ச்..! அனைத்து போட்டிகளுக்குமான மைதானங்கள் ஒரு பார்வை

ஐசிசி உலக கோப்பை அக்டோபர் 15 ஆம் தேதி நாளை தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணி விளையாடும் தேதி, நேரம் மற்றும் மைதானங்கள் குறித்து பார்க்கலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 4, 2023, 04:02 PM IST
  • உலக கோப்பை கிரிக்கெட் தொடர்
  • அதிகாரப்பூர்வமாக நாளை தொடக்கம்
  • இந்திய அணி விளையாடும் நாட்கள்
இந்தியாவுக்கு மட்டும் பேட்டிங் பிட்ச்..! அனைத்து போட்டிகளுக்குமான மைதானங்கள் ஒரு பார்வை title=

உலக கோப்பையை இந்தியா இம்முறை தனியாக நடத்துகிறது. போட்டியை நடத்தும் அணியாக இந்திய அணி உலக கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் விளையாட இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. எம்எஸ் தோனி தலைமையில் சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதன்பிறகு நடைபெற்ற உலக கோப்பைகளில் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

மேலும் படிக்க | உலகக் கோப்பையை இலவசமா பாருங்க... - இப்போ புது வசதியும் வந்துருக்கு!

இம்முறை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி உலக கோப்பையில் விளையாடுகிறது. 2023 ஆசியக் கோப்பையை வென்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி நல்ல பார்மில் இருக்கும் இந்திய அணி, உலக கோப்பையிலும் இதே ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருக்கின்றனர். இம்முறை உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ரவுண்ட் ராபின் முறையில் பெரிய தொடராக நடைபெற இருக்கிறது. அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.  அந்தவகையில் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் தேதி, நேரம், மைதானம் மற்றும் எதிரணிகளின் விவரம் ஆகியவற்றை இங்கே பார்க்கலாம். 

ஒருநாள் உலகக் கோப்பை 2023: இந்திய அணி போட்டிகள் விவரம்

அக்டோபர் 8: இந்தியா v ஆஸ்திரேலியா, சென்னை, மதியம் 2 மணி

அக்டோபர் 11: இந்தியா v ஆப்கானிஸ்தான், புது டெல்லி, மதியம் 2 மணி

அக்டோபர் 14: இந்தியா v பாகிஸ்தான், அகமதாபாத், மதியம் 2 மணி

அக்டோபர் 19: இந்தியா v பங்களாதேஷ், புனே, மதியம் 2 மணி

அக்டோபர் 22: இந்தியா v நியூசிலாந்து, தர்மசாலா, மதியம் 2 மணி

அக்டோபர் 29: இந்தியா v இங்கிலாந்து, லக்னோ, மதியம் 2 மணி

நவம்பர் 2: இந்தியா v இலங்கை, மும்பை, மதியம் 2 மணி

நவம்பர் 5: இந்தியா v தென் ஆப்பிரிக்கா, கொல்கத்தா, மதியம் 2 மணி

நவம்பர் 11: இந்தியா v நெதர்லாந்து, பெங்களூரு, மதியம் 2 மணி

இதில் பெரும்பாலான பிட்சுகள் பேட்டிங் பிட்சாக இருப்பதால், சரவெடி நிச்சயம் இருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News