கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்... ரசிகர்களுக்கு சொல்லிய செய்தி

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் தினேஷ் கார்த்திக். சிறப்பாக விளையாடினாலும் அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தார். இந்தச் சூழலில் நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2022ல் பெங்களூரு அணிக்காக களமிறங்கியிருக்கும் அவர் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். மேலும், பல ஆட்டங்களை வெற்றிகரமாக ஃபினிஷ் செய்தும்கொடுத்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 23, 2022, 06:10 PM IST
  • இந்திய அணிக்கு திரும்பினார் தினேஷ் கார்த்திக்
  • தினேஷ் கார்த்திக் ட்வீட்
  • தினேஷ் கார்த்திக்கிற்கு குவியும் வாழ்த்துகள்
கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக்... ரசிகர்களுக்கு சொல்லிய செய்தி title=

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் தினேஷ் கார்த்திக். சிறப்பாக விளையாடினாலும் அணிக்குள் வருவதும், போவதுமாக இருந்தார். இந்தச் சூழலில் நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2022ல் பெங்களூரு அணிக்காக களமிறங்கியிருக்கும் அவர் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார். மேலும், பல ஆட்டங்களை வெற்றிகரமாக ஃபினிஷ் செய்தும்கொடுத்தார்.

ப்ளே ஆஃப் சுற்றுக்கும் பெங்களூரு தகுதி பெற்றிருப்பதால் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கவிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றிருக்கிறார்.

Dinesh Karthik

35 வயது ஆனாலே ஓய்வு குறித்து சிந்திக்கும் வீரர்கள் மத்தியில் தொடர் போராட்டத்தாலும், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தாலும் 37 வயதில் அவர் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

DK

இந்நிலையில் இந்திய அணியில் தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. நீங்கள் உங்களை நம்பினால் போதும். அனைத்தும் உங்களை தானாக தேடி வரும்” என பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | 2022 ஐபிஎல்: அடேங்கப்பா.. சிக்ஸரில் இப்படியொரு சாதனையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News