அரைசதம் அடித்ததும் சல்யூட் செய்யும் துருவ் ஜூரல்! பின்னால் இருக்கும் காரணம்!

Dhruv Jurel Salute Celebration: டெஸ்டில் தனது முதல் அரைசதம் முடிந்த பிறகு துருவ் ஜூரல் செய்த சல்யூட் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 26, 2024, 10:18 AM IST
  • அரை சதம் அடித்து அசத்திய ஜுரேல்.
  • இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார்.
  • விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக உள்ளார்.
அரைசதம் அடித்ததும் சல்யூட் செய்யும் துருவ் ஜூரல்! பின்னால் இருக்கும் காரணம்! title=

Dhruv Jurel Salute Celebration: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஜேசிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது 90 ரன்களை அடித்து அணியை காப்பாற்றினார் துருவ் ஜூரல். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் தனது இடத்தை நிலைநிறுத்தி கொண்டுள்ளார். இது துருவ் ஜூரலுக்கு இரண்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டி தான்.  23 வயதான துருவ் 161-5 என்ற இக்கட்டான நிலையில் இருந்த அணி சிறிது நேரத்தில் 177-7 பெரிய சிக்கலில் மாறியது.  பின்பு குல்தீப் யாதவுடன் பாட்னர்ஷிப் போட்ட துருவ் நிதானமாக ஆடி ரன்களை அடித்தார்.  இந்த ஒரு பாட்னர்ஷிப் இங்கிலாந்து அணியின் வெற்றியை பறித்தது.

மேலும் படிக்க | பரிதாப நிலையில் பாஸ்பால்... வெற்றியை நெருங்கும் இந்தியா... ரோஹித் - ஜெய்ஸ்வால் மிரட்டல்!

துருவ் ஜூரல் 149 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். இருப்பினும் தனது முதல் சதத்தை பதிவு செய்ய முடியாமல் போனது.  கடந்த ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் 46 ரன்களில் ஆட்டமிழந்தார் துருவ். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்துள்ளார்.  அரை சதம் அடித்தவுடன் ஜூரல் சல்யூட் சைகை செய்தார், இது சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.  துருவ் ஜூரலின் தந்தை கார்கில் போரில் இருந்தவர், இந்திய ராணுவத்தில் ஹவால்தாராக இருந்தார்.  தனது தந்தைக்காக இந்த சல்யூட்டை அடித்துள்ளார். 

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பந்த் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் கே.எஸ்.பாரத் அணியில் சிறிது நாட்கள் விக்கெட் கீப்பிங் பேட்டராக இருந்து வந்தார். கீப்பிங்கில் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங்கில் ஒன்றுமே செய்யவில்லை. இந்த இங்கிலாந்து தொடரிலும் முதல் இரண்டு டெஸ்டில் இடம் பெற்ற கேஎஸ் பரத் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார். பின்பு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பரத்திற்கு பிறகு, ஜூரல் ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகமானார். 2020 U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த இந்திய U19 அணியில் இடம் பெற்று இருந்தார் துருவ் ஜுரேல்.

நீண்ட காலமாக பிசிசிஐ தேர்வாளர்களின் கண்களில் இருந்து வந்தார் ஜுரேல். மேலும் U19 அணியின் துணைக் கேப்டனாகவும் இருந்துள்ளார்.  கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலும், கடந்த மாதம் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரிலும் இந்தியா-ஏ அணியில் விளையாடி நல்ல பெர்பாமஸ் கொடுத்து இருந்தார்.  பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் சிறப்பாக உள்ள ஜுரேல் நீண்ட நாட்கள் இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | நடப்பு சாம்பியனை சம்பவம் செய்த தமிழ்நாடு... ரஞ்சி டிராபி அரையிறுதியில் என்ட்ரி - ஏன் முக்கியம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News