IND vs ENG: அணியில் நன்றாக விளையாடியும் வாய்ப்பை இழக்கும் முக்கிய வீரர்!

India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அக்சர் அல்லது குல்தீப் இருவரில் யாரை வெளியில் உட்கார வைக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இந்தியா உள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Feb 12, 2024, 06:26 AM IST
  • பிப்ரவரி 15ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட்.
  • ஜடேஜா, ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர்.
  • ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் நீக்கப்பட்டுள்ளார்.
IND vs ENG: அணியில் நன்றாக விளையாடியும் வாய்ப்பை இழக்கும் முக்கிய வீரர்! title=

India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இந்தியாவிற்கு சாதகமாக இருக்கவில்லை.  ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் தோல்விக்கு பிறகு, இந்தியா கடும் விமர்சனங்களை சந்தித்தது.  இதனை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை 1-1 என்ற சமநிலையில் வைத்துள்ளது.  இந்நிலையில், வரும் பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.  விராட் கோலி மீதமுள்ள தொடரிலும் பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தி உள்ளது.  மேலும் KL ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.  ஆனால் விளையாடுவார்களா என்பது சந்தேகமே.

மேலும் படிக்க | மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோற்ற இந்தியா! இந்த முறை U19 டீம்!

மீதமுள்ள போட்டிகளுக்கான இந்திய அணியில் பிசிசிஐ பெரிய மாற்றங்களை கொண்டு வரவில்லை என்றாலும், மிடில் ஆர்டரில் ரன்கள் அடிக்க சிரமப்படும் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து வெளியேற்றி உள்ளது. 2வது டெஸ்ட்க்கு பிறகு முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதி பட்டாலும், ஐயர் குணமடைந்துள்ளார்.  ஆனாலும், அவரை அணியில் எடுக்கவில்லை.  மேலும், விசாகப்பட்டியில் தனது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதார் நல்ல துவக்கத்தை கொடுத்ததால், 5வது இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.  மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகள் முறையை ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலாவில் நடைபெறுகிறது.  இந்தியா தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற எண்ணுகிறது. 

கீப்பிங்கில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எஸ்.பாரத்தின் டெஸ்ட் வாழ்க்கை இந்த தொடருடன் முடிவுக்கு வரலாம். மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல், ஜடேஜா, பட்டிதார் உள்ள நிலையில், பாரத் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பினால் மீதலுள்ள போட்டிகளுக்கு துருவ் ஜூரல் அணியில் எடுக்கப்படலாம்.  மேலும், இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பும்ரா 3வது டெஸ்டிலும் விளையாட வாய்ப்புள்ளது.  நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்தை அச்சுறுத்தி வரும் ஒரே இந்திய பந்துவீச்சாளர் பும்ரா தான். அதே சமயத்தில் சிராஜ் அணியில் இடம் பெறுவது பிட்ச் பொறுத்து முடிவு செய்யப்படும். 

பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் ஒன்றாக தேவைப்படா விட்டால், இந்திய அணி 4வது ஸ்பின்னருடன் களமிறங்க கூடும். இரண்டாவது டெஸ்ட்லேயே வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகேஷ் குமாரு விளையாடினார். தற்போது ஜடேஜா குணமாகி வருவதால், இந்திய அணிக்கு யாரை தேர்வு செய்வது என்ற தலைவலி தொடங்கி உள்ளது.  2வது டெஸ்டில் சேர்க்கப்பட்ட குல்தீப் யாதவ் நன்றாக பந்து வீசி இருந்தார். அக்சர் படேல் பேட்டிங்கில் வலு சேர்த்தாலும், பவுலிங்கில் சிறப்பாக ஈடுபடவில்லை.  எனவே, 3வது டெஸ்ட் போட்டியில் இருவரில் ஒருவர் மட்டுமே விளையாட முடிவும் என்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

இந்திய அணி: ரோஹித் சர்மா (C), ஜஸ்பிரித் பும்ரா (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கேஎல் ராகுல்*, ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்

மேலும் படிக்க | இனி எப்போதும் இந்த வீரருக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை! பிசிசிஐ அதிரடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News