இனி எப்போதும் இந்த வீரருக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை! பிசிசிஐ அதிரடி!

India vs England: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Feb 11, 2024, 05:00 PM IST
  • ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து தொடரில் நீக்கம்.
  • தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்படுகிறார்.
  • ரஜத் பட்டிதார், ஷர்பாஸ் கான் தேர்வு.
இனி எப்போதும் இந்த வீரருக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை! பிசிசிஐ அதிரடி! title=

India vs England: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இங்கிலாந்து தொடருக்கான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் 1 - 1 என்று சமநிலையில் இருப்பதால் மீதமுள்ள போட்டிகளுக்கான இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வழக்கம் போல பிசிசிஐ பெரிய மாற்றங்களை எதுவும் செய்யவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் மீதமுள்ள 3 போட்டிகளுக்கான அணியில்'இருந்து நீக்கப்பட்டுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் தசை பிடிப்பு இருப்பதாக கூறப்பட்டது, ஆனாலும் அவர் தற்போது குணமடைந்து இருப்பதாகவும், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து காயம் காரணமாக அவர் விலகவில்லை என்றும் தேர்வுக்குழுவால் நீக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | கோலி வைரம்.... பும்ரா அப்போதே இதை சொன்னார் - ரவி சாஸ்திரி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

முதலில் காயம் காரணமாகவே ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் தேர்வு செய்யப்படாமல் உள்ளார் என்று முதலில் கூறப்பட்டது, தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விளையாடாத நிலையில், மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காக பிசிசிஐ முழு சுதந்திரத்தையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் முதல் டெஸ்டில் ஏற்பட்ட காயம் காரணமாக கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை, தற்போது அவர்கள் குணமடைந்து வருவதால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பிசிசிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, இதை வைத்தே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம். "ஒருவேளை காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில இடம் பிடிக்கவில்லை என்றால் பிசிசிஐ இது குறித்து நிச்சயம் செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கும், ஆனால் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை, இதனால் அவர் நீக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது " என்று பிசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷ்ரேயாஸ் ஐயர் நீண்ட காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிரமப்பட்டு வருகிறார். மேலும் சமீபத்திய ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். 2022ல் பங்களாதேஷுக்கு எதிராக கடைசியாக அரை சதம் அடித்தார். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐயர் 4, 12, 0, 26, 31, 6, 0, 4*, 35, 13, 27, 29 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.  மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து ஷார்ட் பால் பந்துகளில் ஆட்டமிழந்து வருகிறார்.  ஸ்பின்னர்கள் கூட அவருக்கு ஷார்ட் பால் வீசி வருகின்றனர். இந்நிலையில், நீண்ட வாய்ப்பிற்கு பிறகு தற்போது ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சுழற்சியில் இந்தியா இன்னும் ஒரு பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஐயருக்குப் பதிலாக ரஜத் படிதார், சர்பராஸ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | Video: நம்பர் 7 ஏன் ரொம்ப ஸ்பெஷல்... தோனி கூலாக சொன்ன பதிலை பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News