IND vs ENG: மைதானத்திற்கே வந்த இந்திய தேர்வு குழு! இந்த வீரர்களுக்கு இனி இடமில்லை!

India vs England: இங்கிலாந்து தொடருக்கான மீதமுள்ள போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்ய அஜித் அகர்கர் வைஜாக் மைதானத்திற்கு நேரில் வந்தார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2024, 07:41 AM IST
  • மீதமுள்ள தொடருக்கான இந்திய அணி.
  • தேர்வுக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
  • விராட் கோலி அணிக்கு திரும்ப வாய்ப்பு.
IND vs ENG: மைதானத்திற்கே வந்த இந்திய தேர்வு குழு! இந்த வீரர்களுக்கு இனி இடமில்லை! title=

India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது, 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இந்நிலையில், இது குறித்து ஆலோசிக்க இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் 2வது டெஸ்ட் நடைபெறும் விசாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார். தற்போது இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இல்லாத போதிலும், இந்தியா 2வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (209), ஷுப்மான் கில் (104) மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் அசத்தலான 9 விக்கெட்டுகளுடன் விசாகப்பட்டியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா சிறப்பாக விளையாடியது. 

மேலும் படிக்க | ரிவ்யூ எடுக்கச் சொல்லி அடம்பிடித்த குல்தீப்... கண்டுக்காத ரோஹித் சர்மா - கடைசியில் நடந்தது இதுதான்!

இருப்பினும், இந்திய அணியில் சிலரின் பங்களிப்பு சிறப்பாக இல்லை.  ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறது, அதே போல முகேஷ் குமாரின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அணியில் 4 பவுலர்களை வைத்து விளையாடியது போல் தான் இருந்தது.  கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று சுட்டி காட்டினார்.  " விசாகப்பட்டினம் பிட்ச் பேட்டிங் செய்ய மிகவும் சிறப்பாக இருந்தது. அணியில் சில வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர், ஆனால் பெரிய ஸ்கோரைப அவர்களால் அடிக்க முடியவில்லை. அவர்கள் இளம் வீரர்களாகவும், அவர்களுக்கு இன்னும் பயிற்சிகள் தேவை என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் இளம் வீரர்கள் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.

இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் நன்றாக இருந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க சிரமப்படுகின்றனர்.  ஸ்ரேயாஸ் ஐயர் அவரது கடைசி 12 இன்னிங்ஸ்களில் எதிர்பார்த்த ரன்களை அவரால் அடிக்க முடியவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் அவரது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் இங்கிலாந்திற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில், 4 இன்னிங்சிலும் ரன்கள் அடிக்கவில்லை.  ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் ஐயர், இந்த தொடரில் நன்றாக விளையாடவில்லை.  3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்றோர் அணிக்கு திருப்ப வாய்ப்பு உள்ளது.

இதனால் ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார் ஆகியோர் தங்கள் இடத்தை விட்டு கொடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.  தற்போது விசாகப்பட்டினத்திற்கு வந்துள்ள தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மீதமுள்ள போட்டிகளுக்கான இந்திய அணியை இன்னும் சில தினங்களில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதற்கிடையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டுக்கு இடையே 10 நாள் இடைவெளி இருப்பதால் இங்கிலாந்து அணி துபாய்க்கு செல்ல உள்ளது.  அங்கு இங்கிலாந்து அணி சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் சில கோல்ஃப் விளையாட்டில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | IND vs ENG: 3வது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி இல்லை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News