WTC Ranking: ஒரே வெற்றியில் உச்சத்தில் இந்தியா... அதளபாதாளத்தில் இங்கிலாந்து

WTC Ranking 2023-2025: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை வெளியாகி உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.

 

 

 

 

1 /7

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த பிப். 2ஆம் தேதி தொடங்கியது. நான்காம் நாளான இன்றே போட்டி நிறைவடைந்தது.   

2 /7

இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்திருந்த நிலையில், 292 ரன்களை மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் அடித்தது. இதன்மூலம், இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

3 /7

இரண்டாவது போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்ற நிலையில், 1-1 என்ற கணக்கில் இந்தியாவும் தொடரை சமன் செய்தது. இன்னும் மூன்று போட்டிகள் தொடரில் மீதம் உள்ளது.

4 /7

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பின்னர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தரவரிசை (2023-2025 சுழற்சி) வெளியிடப்பட்டது. 

5 /7

அதில், இந்தியா இந்த சுழற்சியில் 6 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றி, 2இல் தோல்வி மற்றும் 1 போட்டியை டிராவும் செய்துள்ளது. 38 புள்ளிகள் என்றாலும் தரவரிசையை தீர்மானிக்கும் புள்ளிகள் சதவீதம் அமைப்பில் (Points Percentage System) இந்தியா முன்னிலையில் உள்ளது. 52.77 புள்ளி சதவீதத்துடன் இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 

6 /7

இங்கிலாந்து அணி 7 போட்டிகள் விளையாடி 3இல் வெற்றி, 3இல் தோல்வி மற்றும் ஒரு டிரா என 16 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும், 33.33 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளது. அதாவது கடைசிக்கு முந்தைய இடம்.   

7 /7

இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப். 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்க உள்ளது.