Ind vs Eng: விராட்டுடன் இணைந்து இந்தியாவை வெற்றிநடை போட செய்யும் வீரர் யார்?

கிரிக்கெட் போட்டியில் துணை கேப்டன் ரோஹித் சர்மா அணியை வழிநடத்த அனுமதிப்பது விராட் கோலியின் சிறந்த நடவடிக்கை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கோலிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 23, 2021, 05:19 PM IST
  • விராட்டின் கள முடிவுகள் சமோயோஜிதமானது
  • சமயத்திற்கு ஏற்றவாறு அவர் எடுக்கும் முடிவு வெற்றி பெறுகிறது
  • இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பாராட்டு மழை
Ind vs Eng: விராட்டுடன் இணைந்து இந்தியாவை வெற்றிநடை போட செய்யும் வீரர் யார்? title=

கிரிக்கெட் போட்டியில் துணை கேப்டன் ரோஹித் சர்மா அணியை வழிநடத்த அனுமதிப்பது விராட் கோலியின் சிறந்த நடவடிக்கை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கோலிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி 20 போட்டியில் ரோஹித் ஷர்மா என்றும் நினைவில் நிற்கும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவே, இந்தியா இந்த போட்டியிலும், தொடரையும் கைப்பற்ற உதவியது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்த இந்தியா அன்றைய போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி ஜோஸ் பட்லரால் அவுட்டானார் கோலி.  அதன்பிறகு, ரோஹித் சர்மா அணியை வழிநடத்த அனுமதித்தார். இந்த பாணி, கோஹ்லியின் சிறந்த நடவடிக்கை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் 17 வது ஓவரில் சர்துல் தாக்கூரை மீண்டும் பந்து வீச அழைத்தார். நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் முதல் இரண்டு பந்துகளில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஈயோன் மோர்கனை வீழ்த்தினார். இது ஆட்டத்தில் திருப்பத்தைக் கொண்டுவந்தது.

Also Read | Road safety world series 2021: தந்தை சச்சினின் வெற்றியை குதூகலமாய் கொண்டாடிய மகள் சாரா டெண்டுலகர்

“விராட்டின் கேப்டன்ஷிப்… !! என்று குறிப்பிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமூக ஊடகங்களில் பாராட்டு செய்தியை வெளியிட்டுள்ளார். தெளிவாக அவரது தந்திரோபாயங்கள் செயல்படுகின்றன… என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ட்வீட் செய்துள்ளார்.

தனது காலில் சிறு அசெளகரியத்தை உணர்ந்ததால், தேவையில்லமல் காயத்தை  தவிர்ப்பதற்காக களத்தில் இருந்து வெளியேறியதாக போட்டிக்கு பிறகு பேசிய கோஹ்லி தெரிவித்தார். "நான் ஒரு ரன்னுக்காக ஓடியபோது காலில் அசெளகரியம் ஏற்பட்டது. காலில் சிறு பிரச்சனை ஏற்பட்டதை உணர்ந்தேன். அடுத்த இரண்டு நாட்களில் எங்களுக்கு இன்னொரு ஆட்டம் இருந்த நிலையில், ஒரு சிறு அசெளகரியத்தை காயமாக மாற்ற நான் விரும்பவில்லை.  எனவே, வெளியே செல்வதே சிறந்தது என்று முடிவெடுத்தேன்” என்று கோஹ்லி தெரிவித்தார்.

நான்காவது டி 20 போட்டியில் இந்தியாவின் முக்கியமான வெற்றியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் தொடர்பையும் வாகன் குறிப்பிட்டுள்ளார். ஹார்டிக் பாண்ட்யா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது நான்கு ஓவர்களில் 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Also Read | Shocking News! ஜெயலலிதாவின் ஆலயத்தில் பிரகார தெய்வங்களாக பாஜக தலைவர்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News