Road safety world series 2021: தந்தை சச்சினின் வெற்றியை குதூகலமாய் கொண்டாடிய மகள் சாரா டெண்டுலகர்

சத்தீஸ்கரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளின் புகழ்பெற்ற வீரர்களைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2021, 01:21 PM IST
  • ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2021 இன் இறுதிப் போட்டி நடைபெற்றது.
    இந்தியா லெஜண்ட்ஸ் இலங்கை லெஜண்ட்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
    யூசுப் பதான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அபாரமாக ஆடினர்.
Road safety world series 2021: தந்தை சச்சினின் வெற்றியை குதூகலமாய் கொண்டாடிய மகள் சாரா டெண்டுலகர்  title=

புதுடெல்லி: சத்தீஸ்கரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகளின் புகழ்பெற்ற வீரர்களைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். இங்கு சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2021 (Road Safety World Series 2021) இன் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இந்தியா லெஜண்ட்ஸ் சாம்பியன்
சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2021 இன் இறுதிப் போட்டியில், இந்தியா லெஜண்ட்ஸ் இலங்கை லெஜண்ட்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில், யூசுப் பதான் மற்றும் யுவராஜ் சிங் (Yuvraj Singh) ஆகியோர் அபாரமாக ஆடி தாங்கள் இன்னும் எந்த பொட்டிக்கும் தயாராக உள்ளோம் என்பதை நிரூபித்தனர். 

ALSO READ: VIDEO: Yuvraj Singh is Back, 4 பந்தில் 6 சிக்ஸர் அடித்து அசத்தல்!

சாரா டெண்டுல்கரின் கொண்டாட்டம்
சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) மகள் சாரா டெண்டுல்கர் (Sara Tendulkar) இந்த வெற்றியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சச்சின் டிவியில் காணப்படுகிறார். சாரா தனது பதிவில் 'YAY'என்று எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் மூன்று நீல வண்ண இதய இமோஜிகளையும் போட்டு தன்னுடைய அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

Road Safety World Series 2021 போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் லெஹண்ட்ஸ் அணியின் வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ரசிகர்கள் அளித்த ஆதரவும், போட்டிகளைக் காண்பதில் ரசிகர்கள் காட்டிய ஆர்வமும் வீரர்களுக்கு மிகுந்த உந்துதலை அளித்தது. அணியில் ஆடிய அனைத்து வீரர்களுமே தங்களுக்குள் இன்னும் உத்வேகமும் திறமையும் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டினர்.

ALSO READ: Yuvraj Singh: இந்த பிட்ச்ல, அனில் கும்ப்ளே 1000 விக்கெட் எடுப்பாரு…

Trending News